எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 762 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மேலும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் ஐந்து மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ் வழி பாடப்புத்தகங்களையும் முதல்வர் வழங்கினார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் 2021-22-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், ஐ.டி.ஐ. முடித்துச் செல்லும் பயிற்சியாளர்கள், தொழில் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு பெறும் வகையில், பயிற்சியின் தரம் உயர்த்திட, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும், மாறிவரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிட முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழகத்தின் இளைஞர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கில், தமிழக அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை 2877 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் தொழில் 4.0 தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தமிழகத்தின் தொழிற்பயிற்சி நிலையங்களின் வளர்ச்சியில் ஒரு சிறப்பு மிக்க நிகழ்வாகும்.
இந்த மையங்களில், டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட்., நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் நிறுவப்பட்டு, ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்டிரியல் ஆட்டோமேஷன், மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல், அட்வான்ஸ்டு மேனுபேக்சரிங், மெக்கானிக் மின்சார வாகனங்கள், இண்டர்நெட் ஆப் திங்க்ஸ், அடிட்டிவ் மேனுபேக்சரிங், இண்டஸ்ட்டிரியல் பெயிண்டிங், அட்வான்ஸ்டு பிளம்பிங், அட்வான்ஸ்டு ஆட்டோமொபைல் டெக்னாலஜி போன்ற நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமையிலான 20 சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 87.5 : 12.5 என்ற விகிதத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனமும், தமிழக அரசும் முதலீடு செய்து இத்திட்டத்தை செயல்படுத்தும்.
அதன்படி, 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 30.06.2023-க்கு முன்னதாக தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என தமிழக அரசு, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் 14.6.2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில், முதற்கட்டப் பணிகள் முடிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம், செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை, அரக்கோணம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கடலூர் மாவட்டம் கடலூர், சிதம்பரம், ஈரோடு மாவட்டம் ஈரோடு, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், நாமக்கல் மாவட்டம் நாமக்கல், சேலம் மாவட்டம் சேலம், மதுரை மாவட்டம் மதுரை, தேனி மாவட்டம் தேனி, போடி, திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி, திருச்சி மாவட்டம் திருச்சி, மணிகண்டம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி ஆகிய இடங்களிலுள்ள 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 762 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதன்மூலம், அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு வருடமும் 5140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடைவர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வழக்கொழிந்த பழைய தொழிற்பிரிவுகள் நீக்கப்பட்டு புதிய தொழிற்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 10,040 மாணவர்கள் இந்த 4.0 தரத்திலான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவர். இதுதவிர, பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தோரும் குறு, சிறு நடுத்தர தொழிற்சாலைகளில் பணிபுரிவோரும் இங்கு வழங்கப்படக் கூடிய குறுகிய கால பயிற்சிகளில் சேர்ந்து தற்போதைய தொழில் துறைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களை கற்று பயனடையலாம்.
மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் பயன்படுத்தும் பாடப் புத்தகங்கள் இதுவரை ஆங்கில மொழியில் இருந்து வந்தது. 2022-2023-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்க, திறன் பயிற்சிகளை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் ரூ. 6.80 கோடி செலவில் தமிழில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, தமிழில் பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம்
13 Sep 2025சென்னை : மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது: கனிமொழி எம்.பி.
13 Sep 2025மணிப்பூர் : தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
13 Sep 2025சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் : பக்தர்களுக்கு ஆர்.ஆர்.கோபால்ஜி அழைப்பு
13 Sep 2025சென்னை : சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடப்பதையொட்டி வருகிற 22-ம் தேதி பக்தர்களுக்கு ஆர்.ஆர். கோபால்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
-
இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி
13 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையால் அதிர்ச்சி சம்பவம் நிளவியுள்ளது.
-
திருச்சி பிரச்சாரத்தில் வேலை செய்யாத மைக்: விஜய் பேச்சை கேட்க வந்த தொண்டர்கள் ஏமாற்றம்
13 Sep 2025திருச்சி : விஜய் பேசியபோது திடீர் என்று தொழில்நுட்ப கோளாறால் மைக்கில் வேலை செய்யவில்லை இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
-
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன’ - மோகன் பகவத்
13 Sep 2025மும்பை : இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன என்று மோகன் பகவத் கூறியுள்ளார்.
-
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.
-
பின்லேடன் உங்கள் நாட்டில்தான் பதுங்கியிருந்தார்: ஐ.நா. சபையில் பாகிஸ்தான் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு
13 Sep 2025நியூயார்க் : பின்லேடன் உங்கள் நாட்டில்தான் பதுங்கியிருந்தார் என்று பாகிஸ்தான் மீது இஸ்ரேல் கடுமையாக குற்றஞ்சாட்டி ஐ.நா. சபையில் கேள்வி எழுப்பியது.
-
இரிடியம் மோசடி-30 பேர் கைது: சி.பி.சி.ஐ.டி. அதிரடி விசாரணை
13 Sep 2025சென்னை : இரிடியம் மோசடியில் 30 பேரை சி.பி.சி.ஐ.டி.யினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி எனக்கு திருப்புமுனை அமையும்: த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
13 Sep 2025திருச்சி, திருச்சி திருப்புமுனையாக அமையும் என்று திருச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பேசினார்.
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Sep 2025சென்னை : இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட செயல்பாடுகள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு : துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள், அதன் மீதான தீர்வு குறித்து கேட்டறிந்தார்
13 Sep 2025சென்னை : உங்களுடன் ஸ்டாலின் திட்ட செயல்பாடுகள் குறித்து நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.
-
துவரம்பருப்பு கொள்முதலில் தமிழகத்திற்கு ஒரு விலையா? - டி.டி.வி. தினகரன் கேள்வி
13 Sep 2025சென்னை : துவரம்பருப்பு கொள்முதலில் தமிழகத்திற்கு ஒரு விலையா என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளது.
-
நான் முதல்வன் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் : துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் நடந்தது
13 Sep 2025சென்னை : நான் முதல்வன் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்
-
பா.ம.க. தட்டி எழுப்பினால் தான் திராவிட மாடல் அரசுக்கு விழிப்பு வருமா? - அன்புமணி
13 Sep 2025சென்னை : பா.ம.க. தட்டி எழுப்பினால் தான் திராவிட மாடல் அரசுக்கு விழிப்பு வருமா என்று அன்புமணி கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகள்: திருச்சி பிரச்சாரத்தில் விஜய் கேள்வி
13 Sep 2025திருச்சி, தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் கல்வி கடன் ரத்து, டீசல் விலை குறைக்கப்படும் என்று சொன்னீர்களே என்று விஜய் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.
-
கடலூரில் தொடர் விபத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் - வைகோ
13 Sep 2025கடலூர், கடலூரில் தொடர் விபத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டத்தை தொடர்ந்து த.வெ.க. கூட்டத்திலும் நுழைந்த ஆம்புலன்ஸ்..!
13 Sep 2025திருச்சி, அ.தி.மு.க. கூட்டத்தை தொடர்ந்து திருச்சியில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் கூட்டத்திலும் ஆம்புலன்ஸ் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.