எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை ஏப் 28 - சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது பற்றி கோவையில் 7 மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீன் குமார் பயிற்சி அளித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 13 ந்தேதி 234 தொகுதிகளுக்கும் ஓரே கட்டமாக வாக்கு பதிவு நடந்து முடிந்தது. மின்னணு இயந்திரம் மூலம் நடந்த வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது மே மாதம் 13 ந் தேதி தமிநாடு முழுவதும் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
இதையொட்டி கோவையில் ஓட்டு எண்ணிகையில் ஈடுபடும் அனைவரும் பயிற்சி அளிக்கப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மற்றும் கூடுதல் தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் மண்டலம் வாரியாக வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அளித்து வருகின்றனர்.
இதே போல் ,கோவை கொடீசியா வளாகத்தில் கோவை மண்டலத்தை சேர்ந்த 7 மாவட்ட கலெக்டர்களுக்கும் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் கூடுதல் தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சி வகுப்பில் கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத், திருப்பூர் மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி, ஈரோடு மாவட்ட கலெக்டர் காமராஜ்,நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், சேலம் மாவட்ட கலெக்டர் சந்திரகுமார், தர்மபுரி மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அருண்ராய் மற்றும் தேர்தல் அலுவலர்கள் , நுண்பார்வையாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
பயிற்சி வகுப்புகள் 2 கட்டமாக நடந்தது காலையில் நடந்த பயிற்சி யில் கோவை,திருப்பூர், ஈரோடு, மாவட்ட கலெக்டர்களும் மற்றும் டி.ஆர். ஓக்கள் தொகுதி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிற்பகல் 2 மணிக்குதொடங்கி 5 மணிக்கு முடிந்த பயிற்சி வகுப்பில் நீலகிரி,சேலம், கிருஷ்ணகிரி தர்மபுரி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் டி.ஆர். ஓக்கள் தொகுதி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வாக்கு எண்ணிக்கை நாளான மே 13 ந்தேதி அன்று ஓட்டு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்கு தொடங்கப்பட வேண்டும்என்றும் வாக்கு எண்ணிக்கையை எவ்வித குறைபாடுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடம் இன்றி நடத்தப்பட வேண்டும், தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி ஓப்புதல் பெற்ற பின்னர் தான் முடிவை அறிவிக்க வேண்டும். தபால் வாக்குகளை எவ்வாறு எண்ணுவது என்றும் வாக்குஎண்ணிக்கை மையங்களில் வெளிப்புற பாதுகாப்பு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு தேவையான குடிநீர் , கழிவறை வசதிகள், வாக்கு எண்ணும் அறைகளில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது அவர்களை அமர வைப்பது வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு கூடுதல் பாதுகாப்பு ,செய்தியாளர்களுக்கு ,ஊடக அறை அமைத்து கொடுப்பது குறித்து 7 மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி வகுப்பு முகாமில் எடுத்துரைத்தார்.
முன்னதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் மற்றும் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பெ. அமுதா ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு நேரில் சென்று பாதுகாப்பு பணிகள், பராமரிக்கப்பட்டு வரும் வருகைப்பதிவேடு , வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி கேமிராக்களின் இயக்கம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அரசு பொறியியல் கல்லூரியில் இருந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் பாதுகாப்பு பணிகள் எவ்வாறு உள்ளது .ஏதாவது குறைபாடுகள் இருக்குமாயின் தெரிவிக்கலாம் என்று பிரவீன்குமார் கேட்டார் அதற்குஎவ்வித குறைபாடுகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று பதிலளித்தார்.
இதன் பின்னர் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நிருபர்களிடம் கூறியதாவது
ஓட்டு எண்ணிக்கை தொடர்பான பயிற்சி வகுப்புகள் மண்டலம் வாரியாக அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (27 ந் தேதி)கோவைமண்டலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளது.
ஓட்டு எண்ணும் மையங்களில் சிறப்பான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்த பயிற்சி வகுப்புகள் நாளை (28ந்தேதி) திருச்சியிலும் ,3ந் தேதி மதுரையிலும்,4ந்தேதி புதுக்கோட்டையிலும்.5 ந்தேதி சென்னையிலும் நடத்தப்படுகிறது. 234 தொகுதிகளுக்கும் சுமார் 10 ஆயிரம் பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள் வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்கு துவங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அடுத்த அரை மணி நேரத்தில் மின்னணு இயந்திரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை துவங்கப்படும். ஓரு தொகுதிக்கு குறைந்த பட்சம் 14 மேஜைகள் போடப்படுகிறது.
மேலும் 49 ஓ ஓட்டு போட்டவர்கள் குறித்து காவல் துறை எந்தவித விசாரணையும் நடத்தவில்லை. இது குறித்து டி.ஜி. பி. இடம் பேசினேன்.
இவ்வாறு அவர் கூறினார்
இவ் ஆய்வின் போது கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சண்முகசுந்தரம் அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


