முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசிடம் ரூ.500 கோடி கேட்கும் - மமதா பானர்ஜி

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா: ஏப், - 28 - மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை உலுக்கியிருக்கும் சாரதா சிட்பண்ட் நிறுவனத்தின் முதலீடு செய்தோருக்கு முதலீட்டுத் தொகையை திருப்பிக் கொடுப்பதற்காக மத்திய அரசிடம் ரூ.500 கோடி கேட்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று கூறுகையில், இடதுசாரிகள் தலைமையிலான முந்தைய அரசின் போது சஞ்சைத்தா மற்றும் வெரோனா ஆகிய நிதி நிறுவனங்களும் முதலீட்டாளர்களை ஏமாற்றின அப்போதே கடும் சட்டம் இயற்றியிருந்தால் இப்போது சாராதா குழுமத்தால் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்திருக்க மாட்டார்கள்.இதுபோல, ரிசர்வ் வங்கி, பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) ஆகியவையும் இதுபோன்ற மோசடி நிறுவனங்களின் செயல்பாட்டைக் கண்டறியத் தவறி விட்டன. மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த அமைப்புகள் தங்கள் கடமையைச் செய்யத் தவறியதால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு, அவர்கள் முதலீடு செய்த தொகையைத் திருப்பித் தருவதில் மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது. எனவே, இதற்காக மத்திய அரசிடம் ரூ.500 கோடி கேட்கப்படும். எதிர்காலத்தில் முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கும் புதிய சட்டம் ஏப்ரல் 30ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். மே 5ந் தேதிக்குள் இந்த சட்டத்துக்கு ஆளுநர் எம்.கே. நாராயணன் ஒப்புதல் அளிப்பார். மோசடியில் ்டுபடும் நிறுவனங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கு இந்த சட்டம் வகை செய்யும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago