முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் தானிய இறக்குமதி தடையை நீக்கியதற்கு எதிர்ப்பு : பல்கேரியாவில் விவசாயிகள் போராட்டம்

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2023      உலகம்
Ukraine 2023-09-19

Source: provided

கீவ் : உக்ரைன் தானியங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை முடிவுக்கு கொண்டு வருவதை எதிர்த்து பல்கேரியாவில் டிராக்டர்களை அணிவகுத்து நிற்க செய்து விவசாயிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது முதலே உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது பெருமளவில் குறைந்துள்ளது. நிலைமையை சமாளிக்க குறைந்த விலைக்கு தங்கள் நாட்டு தானியங்களை உக்ரைன் ஏற்றுமதி செய்தது. 

இதனால் தங்கள் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதிய ஐரோப்பிய யூனியன் உக்ரைனில் இருந்து தானியங்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. 

இந்நிலையில், உக்ரைன் மீதான தடையை பல்கேரியா அரசு முடிவுக்கு கொண்டு வந்ததால் அங்குள்ள விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சோபியா பகுதியில் நூற்றுக்கணக்கான டிராக்டர்களுடன் கூடிய விவசாயிகள் அவற்றை அணிவகுக்க செய்து தாங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து