எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை:நீட் தேர்வின் பலன் பூஜ்யம் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட் ஆப்) பூஜ்யமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
நீட் தேர்வின் பலன் பூஜ்யம் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. நீட் முதுநிலை தேர்வு கட்-ஆப்-ஐ பூஜ்யமாக குறைப்பதன் மூலம், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி என்பது அர்த்தமற்றது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
இது பயிற்சி மையங்கள் மற்றும் தேர்வுக்கு பணம் செலுத்துவது பற்றியது. தகுதி தேவையில்லை. நீட் தேர்வுக்கும் தகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை நாம் காலம் காலமாக சொல்லி வருகிறோம். இது வெறும் சம்பிரதாயமாக மாறி விட்டது, உண்மையான தகுதிக்கான அளவுகோல்கள் எதுவும் நீட் தேர்வில் இல்லை.
விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வு என்ற பலிபீடம் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பா.ஜ.க. அரசை அகற்ற வேண்டும் என்று அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |