முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய பொறுப்பில் இருந்து முகமது ஹபீஸ் விலகல்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      விளையாட்டு
Muhammad-Hafiz 2023-09-22

Source: provided

கராச்சி : முகமது ஹபீஸ் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்பக் குழுவில் நியமிக்கப்பட்டார். முன்னாள் கேப்டன்கள் இன்சமாம்-உல்-ஹக், மிஸ்பா-உல்-ஹக் ஆகியோரையும் கொண்ட இக்குழு அணியின் முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை வழங்கும். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக முகமது ஹபீஸ் திடீரென்று அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான எனது நேர்மையான ஆலோசனைகள் தேவைப்படும் போதெல்லாம் நான் எப்போதும் அளிப்பேன். எப்போதும் போல் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

எனினும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் செயல் திறனை மதிப்பிடுவதற்க்காக நேற்று நடந்த கிரிக்கெட் வாரிய ஆலோசனை கூட்டத்தில் முகமது ஹபீசும் கலந்து கொண்டார். இதில் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், கேப்டன் பாபர் ஆசம், துணை கேப்டன் ஷதாப்கான் மற்றும் மிஸ்பா-உல்-ஹக் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து