Idhayam Matrimony

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2023      இந்தியா
Vande-Bharat-Start-up 2023-05-25

Source: provided

புதுடெல்லி : தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 9 வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

அதிவேகத்தில், உலத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ஒரு சொகுசு பயணம் என்கிற அடிப்படையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 ரயில்கள் இயங்கி வருகிறது. 

இந்த நிலையில் தமிழகத்தில் நெல்லை-சென்னை வழித்தடம் உள்பட மொத்தம் 11 மாநிலங்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும் 9 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

 அதன்படி நெல்லை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் நெல்லைக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடைகிறது. 

 உதய்பூர் - ஜெய்ப்பூர், ஐதராபாத் - பெங்களூரு, விஜயவாடா -சென்னை (ரேணிகுண்டா வழியாக), பாட்னா -ஹவுரா, காசர்கோடு - திருவனந்தபுரம், ரூர்கேலா -புவனேஸ்வர் - பூரி, ராஞ்சி - ஹவுரா, ஜாம்நகர் - ஆமதாபாத் ஆகிய வழித்தடங்களில் புதிய ரெயில்கள் இயங்க உள்ளன. 

இதன்மூலம் தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்கள் பயன்பெறுகிறது. 

மேற்கண்ட வழித்தடங்களில் தற்போதுள்ள அதிவேக ரயில்களுடன் ஒப்பிடும்போது ரூர்கேலா- புவனேஸ்வர்-பூரி ரயில் மற்றும் காசர்கோடு - திருவனந்தபுரம் ரயில் ஆகியவை சுமார் 3 மணி நேரம் வேகமாக இருக்கும். ஐதராபாத் -பெங்களூரு ரயில் இரண்டரை மணி நேரமும், நெல்லை -மதுரை - சென்னை ரயில் சுமார் 2 மணி நேரமும், ராஞ்சி -ஹவுரா ரயில், பாட்னா - ஹவுரா ரயில் மற்றும் ஜாம்நகர் -ஆமதாபாத் ரயில் ஆகியவை சுமார் ஒரு மணி நேரமும், உதய்ப்பூர் - ஜெய்ப்பூர் ரயில் சுமார் அரைமணி நேரமும் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை விட வேகம் கொண்டதாக இருக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து