முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமான் மீது அவதூறு பரப்புவதாக நடிகை விஜயலட்சுமி மீது நாம் : தமிழர் கட்சி நிர்வாகி புகார்

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2023      தமிழகம்
Vijayalakshmi 2023-08-28

Source: provided

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பொய் புகார் அளித்து அவதூறு ஏற்படுத்தி வருவதாக, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் புகார் அளித்துள்ளார். 

கடந்த 2011-ம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றி விட்டார் என வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். பின்னர், அப்புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். 

தொடர்ந்து சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையே, கடந்த 15-ம் தேதி நள்ளிரவு சீமான் மீது, போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி திடீரென அறிவித்தார்.

இதையடுத்து போலீசாரின் சம்மனை ஏற்று, கடந்த வாரம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்த நிலையில் இருவரும் மாறி மாறி சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். 

சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில், என் மீது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறு பரப்பி வருகிறார். இதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எனது தற்கொலைக்கு சீமான்தான் காரணம் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பொய் புகார் அளித்து நடிகை விஜயலட்சுமி அவதூறு பரப்பி வருவதாக, வளசரவாக்கம் காவல் நிலையத்தில்  நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார். 

அப்புகாரில், தமிழர் முன்னேற்ற படை கட்சி தலைவர் வீரலட்சுமியின் தூண்டுதல்பேரில், நடிகை விஜயலட்சுமி பணம் பறிக்கும் நோக்கில் சீமான்மீது பொய் புகார் அளித்து வந்துள்ளார். அவரது திட்டம் நிறைவேறாததை அறிந்து, அப்புகாரை வாபஸ் பெற்று சென்று விட்டார்.

சென்னை ஐகோர்ட்டில் இவ்வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி மீண்டும் பணம் பறிக்கும் நோக்கில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்மீது அவதூறு பரப்புவதுடன், தனது தற்கொலை முயற்சிக்கு அவர்தான் காரணம் என வீடியோ வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. 

சீமான்மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் நடிகை விஜயலட்சுமி மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இப்புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து