முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்கர் விருதுக்கு மலையாள திரைப்படம் "2018" தேர்வு : டோவினோ தாமஸுக்கு சிறந்த ஆசிய நடிகர் விருது

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      சினிமா
Tovino-Thomas 2023-09-27

Source: provided

புதுடெல்லி : 2024-ம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக 2018 மலையாள திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்காக நடிகர் டோவினோ தாமஸுக்கு சிறந்த ஆசிய நடிகருக்கான செப்திமிஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது.

இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப். 

கேரளத்தில் மே 5-ம் தேதி வெளியான இப்படம் உலகளவில்  ரூ. 180 கோடியை வசூலித்ததாகவும் கேரளத்தில் மட்டும் ரூ. 89 கோடி வசூலைக் குவித்தாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் டோவினோ தாமஸுக்கு சிறந்த ஆசிய நடிகருக்கான செப்திமிஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச விருதுகளில் ஒன்றாக  கருதப்படும் இவ்விருது தனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த விருதை கேரளத்திற்கு சமர்பணம் செய்வதாகவும் நடிகர் டோவினோ தாமஸ் தெரிவித்துள்ளார். 

மேலும், 2018 திரைப்படம் அதிகாரப்பூர்வமாக இந்தியா சார்பில் 2024-ம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து