முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கற்றாழையின் மருத்துவ பயன்கள்

 

  1. கற்றாழையில் சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, செங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, வரிக்கற்றாழை எனப் பல வகை கற்றாழைகள் உண்டு.
  2. கற்றாழையில் உள்ளே இருக்கும் சதைப் பகுதியை எடுத்து தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.
  3. கற்றாழை முடி வளர்ச்சியை மீட்டெடுக்கவும் தக்க வைக்கவும் உதவுகிறது மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கிறது.
  4. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், நீர்கட்டி, மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.
  5. வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸைக் குடித்துவந்தால் உடலில் உள்ள நச்சுகள் முழுமையாக வெளியேற்றப்படும்.
  6. கற்றாழை அழகுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் தயாரிக்கப் பெரிதும் பயன்படும்.
  7. கற்றாழை ஜூஸைக் குடித்துவந்தால் உடலில் உள்ள கழிவுகளை அகற்றவும் உதவுகிறது,
  8. கற்றாழையில் உள்ள வைட்டமின்கள் சருமத்தை ஒளிரச் செய்து, சருமத்தை இயற்கையாகப் பளபளக்கச் செய்யும்.
  9. கற்றாழை ஜூஸைக் குடித்துவந்தால் உடல் வலுவடையும்,உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.
  10. கதிர் வீச்சுகளின் பாதிப்பிலிருந்து சருமத்தைக் காக்கும். அத்துடன் சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும்.
  11. கற்றாழை ஜூஸைக் குடித்துவந்தால் மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.
  12. கற்றாழை எடுக்கப்பட்ட நீருடன் அதற்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நீர் சுண்டுமளவுக்குக் காய்ச்ச வேண்டும். இதை தினமும் தலையில் தடவிவந்தால், கூந்தல் நன்றாக வளரும்.
  13. கற்றாழை உடல் சூட்டை மற்றும் வெப்பத்தைத் தணிக்கும்.
  14. கற்றாழை ஜூஸைக் குடித்துவந்தால் உடல் சூடு தணியும். வெயிலால் தோலுக்கு உண்டாகும் ஒவ்வாமை மற்றும் முகத்தில் வரக்கூடிய கருந்திட்டுகள் நீங்கும்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago