முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி : 3-வது போட்டியில் ஆஸி.யை எதிர்கொள்கிறது

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2023      விளையாட்டு
India 2023-11-24

Source: provided

கவுகாத்தி : 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி இன்று நடக்கவிருக்கும் 3-வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

2-0 என்ற கணக்கில்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற 1-வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்று பெற்றிருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

தொடரை கைப்பற்ற...

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஆட்டம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் தொடரை இழக்கக்கூடாது என்பதில் ஆஸ்திரேலிய அணியினர் வரிந்து கட்டி நிற்பர். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டம் இன்று இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து