முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜாம் புயல் எதிரொலி: வங்கிகள், ஐ.டி. நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : மிக்ஜாம் புயல்  இன்று காலை கரையை கடக்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில்,சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிகள்,  ஐடி, நிதி நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிக்ஜாம் புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது மிக்ஜாம் புயல் காரணமாக தனியார் நிறுவனங்களுக்கு இன்று  விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும், தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல்  இன்று காலை கரையை கடக்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில்,சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிகள்,  ஐடி, நிதி நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து