எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஆர்மினியாவில் நடைபெறும் ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு திங்கள்கிழமை 3 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. ஆசிய ஜூனியர் சாம்பியனான ஹர்திக் பன்வர், ஆடவர் 80 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் 2-3 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷியாவின் அஷுரோவ் பைராம்கானிடம் தோல்வியைத் தழுவி 2-ஆம் இடம் பிடித்தார்.
மகளிர் 54 கிலோ பிரிவில் அமிஷா 0-5 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அயாஸான் ஜிடிக்கிடமும், 80+ கிலோ பிரிவில் பிராச்சி 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சோபிராகோன் ஷகோபிடினோவாவிடமும் வெற்றியை இழந்து வெள்ளி பெற்றனர். ஏற்கெனவே, நேஹா (46 கிலோ), நிதி (66 கிலோ), பரி (50 கிலோ), கிருத்திகா (75 கிலோ), சிகந்தர் (48 கிலோ) ஆகியோர் அரையிறுதியில் தோல்வி கண்டு வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளனர். இத்துடன் இப்போட்டியில் இந்தியா 8 பதக்கங்களைக் கைப்பற்றியிருக்கிறது.
______________
இன்று நியூசி., - வங்கதேச டெஸ்ட்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து 150 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்க உள்ளது.
இந்த தொடரை சமன் செய்ய வேண்டுமானால் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் நியூசிலாந்து அணி ஆட உள்ளது. அதேவேளையில் கடந்த ஆட்டத்தைபோல் இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து தொடரை கைப்பற்றும் முனைப்புடன் வங்காளதேசம் உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
______________
ஜிம்பாப்வே டி-20 அணி அறிவிப்பு
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 7ம் தேதி ஹராரேவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சிக்கந்தர் ராசா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி விவரம்., சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரேக் எர்வின், ட்ரெவர் குவாண்டு, லூக் ஜோங்வே, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, பிராண்டன் மவுடா, கார்ல் மும்பா, டோனி முனியோங்கா, பிளெஸிங் முசரபானி,ரிச்சர்ட் ங்வாரா, சீன் வில்லியம்ஸ்.
______________
மே.இ.தீவுகள்-இங்கி., 2-வது ஒருநாள்
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
முதலாவது ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா? என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தீவிர முனைப்புடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
22 Sep 2025வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ
-
கைபர் பக்துன்வாவில் பாக். விமானப்படை குண்டுவீச்சு : 30 அப்பாவி மக்கள் உயிரிழப்பு
22 Sep 2025இஸ்லாமாபாத் : பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக கைபர் பக்துன்வாவில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது : அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்
22 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
22 Sep 2025இம்பால் : மணிப்பூரில் பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இஸ்ரேல் திடீர் டிரோன் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
22 Sep 2025பெய்ரூட் : லெபனானில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களான 3 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தை பலி ஆனார்கள்.
-
சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்: விஜய் மீது அப்பாவு விமர்சனம்
22 Sep 2025நெல்லை : சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என்றும், விஜய்க்கு அகந்தை அதிகமாக உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
-
3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல்லில் நிலநடுக்கம்
22 Sep 2025இடாநகர் : 3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்
22 Sep 2025பெங்களூரு : கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்
22 Sep 2025ரபாத் : மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார்.
-
சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: பிரதமர் மோடி துணை ஜனாதிபதி புகழாரம்
22 Sep 2025புதுடெல்லி : சாத்தியமற்றதை பிரதமர் மோடி சாத்தியமாக்குவதாக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.