முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் வடியாத மழை வெள்ளம்: வேளச்சேரியில் ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் விநியோகம்

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      தமிழகம்
Helihopter 2023 06 27

Source: provided

சென்னை : சென்னையில் சில பகுதிகளில் வடியாத மழை வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வரும் நிலையில், கடும் பாதிப்புகுள்ளான வேளச்சேரியில் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.

சென்னையில், மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக தேங்கிய மழை நீர் பல்வேறு பகுதிகளில் வடியாமல் உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து வெளியேறும் நீர் ஒக்கியம் துரைப்பாக்கம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. நீர் வெளியேறாமல் உள்ளதால், உணவு, குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

கேகே நகர் பாரதிதாசன் காலனி பகுதிகளிலும் குளம் போல் மழை நீர் தேங்கி உள்ளது. ராட்சத மோட்டார் மூலம் நீர் அகற்றும் பணி நடக்கிறது. குடிநீர் , உணவு, பால் உள்ளிட்டவை இன்று படகு மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

வேளச்சேரி பகுதியிலும் சூழ்ந்த வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ளவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். வாகனங்கள் மற்றும் டூவீலர்கள் சேதம் அடைந்துள்ளன. அந்த பகுதியில் முழங்கால் பகுதி வரை தண்ணீர் தேங்கி உள்ளது. பலர் அங்கிருந்து வெளியேறிவிட்ட நிலையில், உட்புற பகுதிகளில் வசிப்பவர்கள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் அவை விநியோகம் செய்யப்பட்டது.

வட சென்னையில், வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி வெள்ளநீர் வடியாமல் உள்ளது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்து உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேற்கு தாம்பரத்தில் கன்னடபாளையம் பகுதியில் வெள்ள நீர் இன்னும் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. முடிச்சூர் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட மேல்மா நகர், அம்மா நகர், அம்பேத்கர் நகர், ருக்மணி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது. ஐடி அலுவலகம் அமைந்துள்ள தரமணி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், ஐடி ஊழியர்கள் டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் வாகனங்களில் அலுவலகம் செல்கின்றனர்.

தென் சென்னையில் கோவிலம்பாக்கம் துரைப்பாக்கம் வரை ரேடியல் சாலை, வேளச்சேரி பள்ளிக்கரணை சாலை, பள்ளிக்கரணை - தாம்பரம் சாலை, மேடவாக்கம் சோழிங்கநல்லூர் சாலை ஆகியன மழை காரணமாக துண்டிக்கப்பட்டு உள்ளன. இதனிடையே, அடையாறு பகுதியில் திருவிக பாலம் உள்ள பகுதி அருகே சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளனர். திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து திருவான்மியூர் வரையிலான பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

புயல் மற்றும் மீட்பு பணிகளுக்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 5 குழுவினர் சென்னை வந்துள்ளனர். 2 குழுக்கள் வேளச்சேரி மற்றும் பள்ளிகரணை பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. 3 குழுக்கள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. சென்னை போலீஸ் சார்பில், பொது மக்கள் மீட்பு மற்றும் உதவிகளை பெற 23452359, 23452360, 23452361, 23452377 மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டறை எண் 23452437 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து