முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜாம் புயல்: பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      தமிழகம்
CM-2-2023-12-07

சென்னை, மிக்ஜாம் புயல் வெள்ள  பாதிப்புகள் குறித்து நேற்று 3-வது நாளாக பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முகாமில் பொதுமக்களுக்கு பல்வேறு நிவாரண உதவி பொருட்களை அவர் வழங்கினார். 

மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது. சென்னை மற்றும் புறநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். 

நேற்று முன்தினம் 2-வது நாளாக தரமணி, துரைப்பாக்கம் பகுதிகளுக்கு சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றின் முகத்துவாரம் பகுதிக்கும் சென்று பார்வையிட்டார். 

நேற்று 3-வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்லாவரம் பகுதிக்கு சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். பல்லாவரம், பம்மல் வழியாக அனகாபுத்தூர் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனகாபுத்தூரில் ஏற்பாடு செய்திருந்த நிவாரண முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு போர்வை, வேட்டி, சேலை, அரிசி, பிரட், மளிகை பொருட்கள், பால் மற்றும் சாப்பாடும் வழங்கினார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்  அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் , சக்கரபாணி, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் வெள்ள பாதிப்பு குறித்து எடுத்துக் கூறினர். 

இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., கலெக்டர் ராகுர் நாத், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், தி.மு.க. பகுதி செயலாளர்கள் நரேஷ்கண்ணா, வே.கருணாநிதி, பல்லாவரம் இ.ஜோசப் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து