முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் பதியில் அவதார தின விழா

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024      ஆன்மிகம்
Tiruchendur 2024-03-03

Source: provided

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் அய்யா வைகுண்டர் 192-வது ஆண்டு அவதார தின விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

விழாவின் முதல் நாளான நேற்று  முன்தினம் அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, காலை 6 மணிக்கு அன்னதர்மம், பகல் 12மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, மதியம் 1மணிக்கு அன்னதர்மம், இரவு 7 மணிக்கு பணிவிடை அய்யா புஷ்ப வாகன பவனி தொடர்ந்து அன்னதர்மம் நடந்தது.

தொடர்ந்து திரு ஏடு வாசிப்பு, இரவு  அகில திரட்டு அம்மானை கருத்துரைகள்,18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அய்யா வைகுண்டர் அவதார மகிமை, துவையல் தவசு, அகில திருட்டில் வாழ்வியல் கருத்து ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டியும், இரவு சிவசந்திரன் வழங்கிய இன்னிசை கச்சேரியும் நடந்தது.  

2-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்ந்தால், அபயம் பாடுதல், 6.28 மணிக்கு சூரிய உதயத்தில் கடலில் பதம் இட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதார பதிக்கு அழைத்து வருதல் நடைபெற்றது.

தொடர்ந்து அவதார தின விழா பணிவிடை,அன்ன தர்மம்,  வழங்குதல் நடந்தது. விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபையினர் செய்து இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து