முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகும் தி பேமிலி ஸ்டார்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      சினிமா
The-Family-Star 2024-04-02

Source: provided

தெலுங்கிலும், தமிழ் திரையுலகிலும் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் ' தி பேமிலி ஸ்டார்'. இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். 

 ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. 

இதை முன்னிட்டு படக்குழுவினர் தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டா பேசுகையில், '' தமிழ் இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னை வந்த போது அந்தப் பயணம் மிகவும் இனிமையாக இருந்தது. சென்னைக்கு வரும்போதெல்லாம் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். கடந்த முறை ஊடகவியலாளர்களை சந்தித்தபோது.. தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஊடகவியலாளர்கள் விளக்கினர். நானும் அதற்கு பதிலளித்தேன். 

என்னுடைய நடிப்பில் வெளியான முதல் படம் 'அர்ஜுன் ரெட்டி'க்கு நீங்கள் அளித்த ஆதரவு மறக்க முடியாது.ஏன்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து