Idhayam Matrimony

காசாவில் ஐ.நா. பணியாளர்கள் பலி: அமெரிக்கா கண்டனம்: தவறுதலாக தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் ஒப்புதல்

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2024      உலகம்
Netanyahu-(Israeli)

காசா, காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ. நா. தொண்டு நிறுவன பணியாளர்கள் பலியானதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் தவறுதலாக தாக்குதல் நடத்தி விட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல்- காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 6 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் அப்பாவி மக்கள் உள்பட 32 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே மத்திய காசாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஐ.நா. தொண்டு நிறுவன பணியாளர்கள் 5 பேர் பலியானார்கள். 

கார் மீது குண்டு வீசப்பட்டதில் அரசு சாரா தொண்டு நிறுவனமான வேர்ல்டு சென்ட்ரல் கிச்சான் அமைப்பின் வெளிநாட்டு பணியாளர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தொண்டு நிறுவன பணியாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தவறுதலாக தாக்குதல் நடத்தி விட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறும் போது, உதவிப் பணியாளர்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வு கடுமையான தவறு. சிக்கலான சூழ்நிலைகளில் தவறாக அடையாளம் காணப்பட்டதன் விளைவாக இது ஏற்பட்டு விட்டது. இது நடந்திருக்கக் கூடாது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றார். 

இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும் போது,  இது ஒரு சோகமான சம்பவம். துரதிர்ஷ்டமானது மற்றும் திட்டமிடப்படாதது. ஆனால் போர் காலத்தில் இது போன்று நடக்கும் என்றார். 

உதவி பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஸ்பெயினும் போலந்தும் இஸ்ரேலிடம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க இஸ்ரேலை இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும் போது, பொதுமக்களை பாதுகாப்பதில் போதுமான நடவடிக்கையை இஸ்ரேல் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து