எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது. கில், சாய் சுதர்ஷன் மற்றும் ராகுல் தெவாட்டியா போன்ற பேட்ஸ்மேன்கள் குஜராத் அணியின் வெற்றிக்கு உதவினர்.
37 லீக் போட்டி...
ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 37 லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினார்கள். இருவரும் ஜோடி சேர்ந்து அருமையான தொடக்கத்தை அந்த அணிக்கு அமைத்து கொடுத்தனர். 52 ரன்கள் வரை இவர்கள் ஜோடி அமைத்தனர்.
ஹர்ப்ரீத் ப்ரார்...
இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டை பறிகொடித்தார். பின்னர் ரிலீ ரோசோவ் களம் இறங்கினார். 7 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து நூர் அகமது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த ஜித்தேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன், ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அப்போது களத்திற்கு வந்த ஹர்பிரீத் சிங் பாட்டியா மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் அதிரடியாக விளையாடினார்கள்.
143 ரன் இலக்கு...
அப்போது ஹர்ப்ரீத் ப்ரார் 29 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிது. கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாஹா இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். சாஹா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சாய் சுதர்ஷன் களத்துக்கு வந்தார். 35 ரன்கள் எடுத்த நிலையில் கில் அவுட் ஆனார். அவரை லிவிங்ஸ்டன் வெளியேற்றினார். தொடர்ந்து மில்லர், சாய் சுதர்ஷன், அஸ்மதுல்லா ஓமர்சாய் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
குஜராத் வெற்றி...
சாய் சுதர்ஷன் 31 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் ராகுல் தெவாட்டியா மற்றும் ஷாருக்கான் இணைந்து பொறுப்புடன் ஆடினர். ஹர்ஷல் படேல் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட்களை கைபற்றினார். ஷாருக் மற்றும் ரஷித் கானை அவர் அவுட் செய்தார். 19.1 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குஜராத். தெவாட்டியா 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணிக்காக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்கள், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்கள், அர்ஷ்தீப் மற்றும் சாம் கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சாய் கிஷோர் வென்றார்.
சுப்மன் கில் பேட்டி...
வெற்றி பெற்ற பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியை நாங்கள் முன்கூட்டியே முடிக்க நினைத்தோம். ஆனால் போட்டி மைதானத்தின் தன்மை காரணமாக கடைசி ஓவர் வரை சென்றது. இறுதியில் இந்த இரண்டு புள்ளிகளை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. கேப்டன்சி செய்வது உண்மையிலேயே எனக்கு ஆர்வமாக இருக்கிறது. அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாட விரும்புகிறேன். பேட்டிங் செய்யும் போது கேப்டன்சி பற்றி அதிகம் யோசிப்பது கிடையாது. லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் அடிக்க ஆசைப்பட்டு ஆட்டமிழந்து விட்டேன். எங்களது அணியில் உள்ள அனைத்து வீரர்களின் சரியான பங்களிப்பினாலே இந்த வெற்றி கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.
சாம் கர்ரன் பேட்டி...
தோல்வி அடைந்த பின்னர் பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் அளித்த பேட்டியில் கூறியதாவது, எங்களுடைய அணி வீரர்கள் பந்துவீச்சில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம் என நினைக்கிறேன். குஜராத் அணியில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழக வீரர் சாய் கிஷோர், சிறப்பாக பந்து வீசினார். இந்த ஆடுகளத்தில் நாம் 160 - 170 ரன்கள் அடித்திருந்தால் வெற்றியை பெற முடியும் என்று நம்பினேன். மேலும் நாங்கள் பந்து வீசிய முறையை பார்த்து எங்களுக்கு வெற்றி கிட்டும் என நினைத்தேன். பேட்டிங்கில் நாங்கள் கொத்தாக விக்கெட் இழக்கின்றோம். அதுவே தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது. என்ன செய்தால் இதை தடுக்க முடியும் என்று தெரிய வேண்டும். ஐ.பி.எல் போன்ற தொடர்களில் இது போன்று தொடர்ந்து போட்டிகளை தோற்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஈரோட்டில் இன்று த.வெ.க. பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு
17 Dec 2025ஈரோடு, விஜய் பிரச்சார கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று நேரில் ஆய்வு நடத்
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
17 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கனிமொழி எம்.பி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
17 Dec 2025சென்னை, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவிப்பு
17 Dec 2025அடிலெய்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் குவாஜா, அலெக்ஸ் கேரியின பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் குவித்துள்ளது.
-
சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு பரிசளித்தார் ஆனந்த் அம்பானி
17 Dec 2025புதுடெல்லி, சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்தார்.
14 ஆண்டுக்கு பிறகு...
-
சென்னை நங்கநல்லூரில் 2-வது ஹஜ் இல்லம் கட்டப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
17 Dec 2025சென்னை, சென்னை சூளையில் ஹஜ் இல்லம் 2-வது இல்லம் எதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
இனி அன்புமணி ராமதாஸ் அல்ல.... அன்புமணி மட்டுமே: ராமதாஸ்
17 Dec 2025விழுப்புரம், இனி அன்புமணி ராமதாஸ் அல்ல அன்புமணி மட்டுமே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய சாதனை: அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி
17 Dec 2025துபாய், ஆடவருக்கான தரவரிசை பட்டியலை சிறிய மாற்றத்துடன் ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
-
45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா தொகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்ய தி.காங்., திட்டம்
17 Dec 2025கொல்கத்தா, 45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்ப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகான தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம்
17 Dec 2025சென்னை, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
-
தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் டிச. 23-ல் தமிழகம் வருகை: நயினார்
17 Dec 2025சென்னை, தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரும் 23-ம் தேதி தமிழகம் வருகிறார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: இந்தியாவின் அந்தஸ்து உயர்கிறது: அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
17 Dec 2025புதுடெல்லி, பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கியதுக்கு இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்று அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-12-2025.
18 Dec 2025 -
தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
18 Dec 2025தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
18 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வில் கடந்த 5 நாட்கள் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்புக்காக த
-
காந்தியின் பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பார்லி. வளாகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
18 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள
-
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விபி-ஜி ராம்ஜி மசோதா பார்லி., மக்களவையில் நிறைவேற்றம்
18 Dec 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
-
காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
18 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை குளிர்விக்க ஏழைகள்
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது: வெள்ளி விலை புதிய உச்சம்
18 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், சவரன் ரூ.99,520-க்கும் விற்பனையானது.
-
அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
18 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ. 1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஈரோட்டில் பிரச்சாரத்தின் போது கம்பத்தில் ஏறிய ரசிகரை கண்டித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, த.வெ.க. தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கம்பத்தில் ஏறிய தொண்டரை, பேச்சை நிறுத்திவிட்டு அவர் கண்டித்தார்.
-
ஈக்வடார் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொலை சம்பவங்கள்..!
18 Dec 2025பார்சிலோனா, ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-
பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள்: ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
18 Dec 2025ஈரோடு, பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள் என ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பேசினார். மேலும், களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே
-
நேரு கடிதங்களை திருப்பி அளிக்க வேண்டும்: சோனியா காந்திக்கு மத்திய அரசு கடிதம்
18 Dec 2025புதுடெல்லி, கடந்த 2008-ம் ஆண்டு பெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள
-
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது: பெயர் இல்லாதவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
18 Dec 2025சென்னை, தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.


