முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      உலகம்
Malaysia-helicopters-2024-04-23

கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா நாட்டின் பேராக் அருகே லுமுட் எனும் பகுதியில் கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 10 பேரும் உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மலேசிய கடற்படை தினத்தின் 90ம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரின் வால் பகுதியில் நடுவானில் மோதுகிறது. இதையடுத்து, இரண்டு ஹெலிகாப்டர்களும் தரையில் விழுந்து நொறுங்கும் காட்சிகளும், ஹெலிகாப்டர்களின் துண்டுகள் காற்றில் பறக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

HOM (M503-3) மற்றும் Fennec (M502-6) ஆகிய இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. இதில், HOM (M503-3) ஹெலிகாப்டரில் ஏழு பேரும், மற்றொரு ஹெலிகாப்டரில் 3 பேரும் பயணித்துள்ளதாக தெரிகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை ஹெலிகாப்டர்களில் இருந்து மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  மலேசிய கடற்படை தினத்தின் ஒத்திகை நிகழ்ச்சியின் போது, அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் சிக்க்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து