முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 14 மே 2024      உலகம்
Nepal 2024-05-14

Source: provided

காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி-என்) கட்சியில் உட்கட்சி பிரச்சனையால் கட்சி இரண்டாக உடைந்தது. 

கட்சி தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு தலைவர் அசோக் ராய் தலைமையிலான குழு போர்க்கொடி தூக்கியது. அதன்பின் இவர்கள் இணைந்து தனிக்கட்சியை உருவாக்கி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்தனர். 

தாய் கட்சியில் உள்ள நேபாளம் என்ற பெயரை நீக்கி விட்டு, புதிய கட்சிக்கு ஜனதா சமாஜ்பதி கட்சி (ஜே.எஸ்.பி.) என பெயர் வைத்தனர். ஜனதா சமாஜ்பதி கட்சியை புதிய அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. 

சமீபகாலமாக ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திர யாதவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை எதிர்கொள்வதற்காக பிரதமர் பிரசந்தாவின் ஆலோசனையின் பேரில் அசோக் ராய் கட்சியை உடைத்து புதிய கட்சியை பதிவு செய்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டினர். 

இந்நிலையில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் பிரசந்தா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் இருந்தும் வெளியேறினார். 

தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் வழங்கினார். அவருடன் அவரது கட்சியைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் தீபக் கார்கியும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். உபேந்திர யாதவின் கட்சி வெளியேறியது பிரசந்தா தலைமையிலான அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனாலும் தற்போது கூட்டணி ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டி உள்ளதாக கூறப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து