முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25-வது படத்திற்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் தமிழா

திங்கட்கிழமை, 20 மே 2024      சினிமா
Hip-Hop-Tamila 2024-05-20

Source: provided

படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ், “வேல்ஸ் பிலிம்ஸில் ஒரு நல்ல படம் எடுத்த திருப்தி இந்தப்படம் மூலம் கிடைத்துள்ளது. இயக்குநரையும், ஆதியையும் படம் பார்த்தவுடன் கூப்பிட்டுப் பாராட்டினேன். இடைவேளை வரை ஜாலியாக இருக்கும், இறுதியில் மிக முக்கியமான விசயத்தைத் தைரியமாகச் செய்துள்ளார்கள். எல்லாப் பள்ளிகளிலும் பிடி சாருக்கும் டீச்சருக்கும் காதல் என வதந்தி இருக்கும். நான் படித்த பள்ளியிலும் இருந்தது. அந்த ஞாபகங்களை இந்தப்படம் மீண்டும் கொண்டு வந்தது. பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.

அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். வரும் 24 ஆம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரவுள்ளோம். படம் பார்த்து உண்மையை எழுதுங்கள், அந்தளவு படம் நன்றாக உள்ளது. ஆதி தான் இந்தப்படத்தின் கதையைக் கொண்டு வந்தார். கார்த்திக் இப்படி ஒரு படம் செய்வார் என நினைக்கவில்லை, அவரை அடுத்த படத்திற்கும் புக் செய்து விட்டேன், அடுத்த படமும் எங்களுக்குத் தான் செய்கிறார். ஆதி இசையமைப்பாளராக அரண்மனை 4ல் கலக்கியிருக்கிறார். அதே போல் பிடி சாரிலும் கலக்கியிருப்பார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும் நன்றி.” என்றார்

25 ஆவது படமான பிடி சார் படத்திற்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் தமிழா இதனை கொண்டாடும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து