எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை துரத்திய சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டது. சென்னை அணி ஜெயிக்க வேண்டும் என கோடிக்கணக்கான ரசிகர்களில் எதிர்பார்ப்பு பொய்த்தது. ஆட்டத்தின் இறுதியில் வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுப்பதற்காக மைதானத்தில் டோனி நீண்ட நின்று கொண்டு இருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆர்சிபி அணி கைக் கொடுக்க வரவில்லை. அதனால் கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு டோனி வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இது குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான வாகன் "தோனியின் கடைசி போட்டியாக இது இருக்கலாம் என்ற சூழலில், போட்டி முடிந்தவுடன் "லெஜெண்ட் அங்கே இருக்கிறார். முதலில் அவரிடம் சென்று நாம் கை கொடுக்க வேண்டும்" என்று ஆர்சிபி வீரர்கள் மனதில் தோன்றிருக்கவேண்டும். கை கொடுத்து மரியாதை செய்த பின்னர் கொண்டாட்டங்களை தொடர்ந்து இருக்கலாம். டோனிக்கு கை கொடுக்க வேண்டும் என்ற கண்ணியம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என ஆர்சிபி வீரர்கள் வருந்துவார்கள் என்றார்.
_____________________________________________
சாம்பியன் பட்டம் வென்ற ஸ்வெரேவ்
இத்தாலி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்தது. இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) மற்றும் நிகோலஸ் ஜாரி (சிலி) முன்னேறினர்.
இறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஸ்வரெவ் 6-4 மற்றும் 7-5 என்ற நேர் செட்டில் நிகோலஸ் ஜாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
_____________________________________________
மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன்
எதிஹாட் மைதானத்தில் நடந்த பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி - வெஸ்ட் ஹாம் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் 3-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மான்செஸ்டர் அணி தரப்பில் பில் போடன் 2 கோல்களும், ரோட்ரி ஒரு கோலும் அடித்து அணி வெற்றி பெற உதவினர். வெஸ்ட் ஹாம் அணி தரப்பில் முகமது குடுஸ் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
இதன் மூலம் பிரீமியர் லீக் தொடரில் தொடர்ச்சியாக 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மான்செஸ்டர் வரலாறு படைத்தது.
_____________________________________________
பஞ்சாப் தோல்வி - பயிற்சியாளர் வேதனை
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது. இதன்மூலம், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது.இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெற்ற 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ளவில்லை. மற்ற மைதானங்களில் நடைபெற்ற 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றோம். ஆனால், சொந்த மண்ணில் விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றோம். சொந்த மண்ணில் எங்களது தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இரண்டு போட்டிகளில் வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியடைந்தோம் என்றார்.
_____________________________________________
மகனுடன் சென்று வாக்களித்த சச்சின்
ஐந்தாம் கட்டத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். சச்சினுடன் அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் தனது வாக்கினை பதிவு செய்தார். ஆனால் சச்சினின் மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா ஆகியோர் வாக்களிக்க வரவில்லை. பட்டமளிப்பு விழா காரணமாக இருவராலும் மும்பைக்கு வர முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சச்சின், ஒன்று, நீங்கள் சிந்திக்காமல் செயல்படுவதால், பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று நான் கூற விரும்புகிறேன், இரண்டு, நீங்கள் சிந்தித்துக் கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் செயல்படாமல் இருக்கிறீர்கள். மக்களை வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இது நமது தேசத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது என்றார்.
_____________________________________________
தீப்தி தங்கம் வென்று சாதனை
2024 ஆம் ஆண்டுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடந்து வருகிறது. பெண்களுக்கான 400 மீ டி20 பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை தீப்தி, 55.06 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில், 59.00 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து தாய்லாந்து வீராங்கனை ஓரவன் கைசிங்கை வெள்ளிப் பதக்ககமும், ஜப்பான் வீராங்கனை நினா கன்னோ 59.73 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
கோபே யுனிவர்சியேட் மெமோரியல் ஸ்டேடியத்தில் 17 முதல் 25 மே 2024 வரை நடைபெறும் இந்த போட்டிகளில் நேற்று முன்தினம் (மே 19) போட்டியின் மூன்றாவது நாளில் ஓட்டப்பந்தய வீராங்கனை ப்ரீத்தி பால் மற்றும் உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் ஆகியோர் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024ல் இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை வென்றுள்ளது. முன்னதாக, தீப்தி ஜீவன்ஜி 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் பெண்கள் 400 மீட்டர் பிரிவில் 56.18 வினாடிகளில் 400 மீட்டர் தூரத்தை எட்டி ஆசிய அளவில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
-
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
26 Oct 2025நெல்லை : ஒவ்வொரு முறையும் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் மத்திய அரசு கிள்ளிக் கொடுக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது
26 Oct 2025பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மற்றும் அது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியயை ஆகியோரை போலீஸார் சனிக்கிழ
-
கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி
26 Oct 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
-
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
26 Oct 2025சென்னை : 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல், சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
-
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
26 Oct 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 4 பேர் பலி
26 Oct 2025கீவ் : உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
-
அமெரிக்க் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்
26 Oct 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
கந்தசஷ்டி சூரசம்ஹார விழா; திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
26 Oct 2025திருச்செந்தூர் : கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி நெல்லை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
26 Oct 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
-
'பைசன்' படக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு : இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி
26 Oct 2025சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2025.
26 Oct 2025 -
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
26 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு
26 Oct 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழ்நாடு விளையாட்டுத்துறை திறமையானவர்களுக்கு என்றென்றும் பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வர்
26 Oct 2025சென்னை : திறமையாளர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
26 Oct 2025கரூர் : கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: தங்க தேரில் சுவாமி வீதிஉலா
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தங்க தேரில் சுவாமி வீதிஉலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம
-
நேரடியாக போர் தொடுப்போம்: ஆப்கானுக்கு பாக். பகிரங்க எச்சரிக்கை
26 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச
-
ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி சம்பவம்: ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
26 Oct 2025ராஞ்சி : ஜார்க்கண்ட்டில் ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
-
கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
26 Oct 2025வாஷிங்டன் : கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
ஆசியான் உச்சி மாநாடு: மலேசியாவில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
26 Oct 2025கோலாலம்பூர் : ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 93 பேர் பலி
26 Oct 2025டெல்அவீவ் : அக்டோபர் 10-ம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 93 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதர அமைச்சகம் த
-
பாக்.குடன் அமெரிக்காவின் நெருக்கம் இந்தியாவுடனான நட்பை பாதிக்காது : மார்கோ ரூபியோ விளக்கம்
26 Oct 2025நியூயார்க் : பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
-
டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
26 Oct 2025புதுடெல்லி : டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தேஜஸ்வி வாக்குறுதி
26 Oct 2025பாட்னா : பீகாரில் இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர 20 நாட்களில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்


