Idhayam Matrimony

ராஜீவ் காந்தி நினைவு தினம்: ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரசார் மலரஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      தமிழகம்
Cong 2024 05 21

Source: provided

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1991-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அப்போது நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த ஸ்ரீபெரும்புதூரில் நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. 

அந்த நினைவிடத்தில் அவரது நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து ராஜீவ் நினைவிடத்தில் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழியையும் காங்கிரஸ் கட்சியினர் எடுத்துக் கொண்டனர். காங்கிரஸ் பிரமுகர்கள் ராஜீவ் காந்தி நினைவாக ரத்த தானமும் செய்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து