முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி அருகே 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

புதன்கிழமை, 29 மே 2024      தமிழகம்
Nilgiri 2024-05-29

Source: provided

ஊட்டி, : நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் யானை கூட்டத்திலிருந்த குட்டி யானை ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் நேற்று காலை 8 மணி அளவில் சம்பவ இடத்தை பார்வையிட்டு கிணற்றுக்குள் இருக்கும் குட்டி யானையை மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

 3 மணி நேரத்துக்கும் மேலாக ஒரு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குட்டி யானையை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. அது முடியாமல் போனதால் இரண்டாவதாக மற்றொரு பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டு தற்போது கிணற்றைச் சுற்றி மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

கிணற்றுக்குள் சிக்கியுள்ள குட்டி யானை வெளியில் வர வழிதெரியாமல் தத்தளித்த நிலையில், ஆக்ரோஷம் அடைந்த தாய் யானை குட்டி யானையைத் தேடி கிணற்றின் அருகே வந்துவிடாமல் இருக்க வனத்துறையினர் தாய் யானை உள்ளிட்ட மற்ற யானைகளை தனிக் குழுவாக நின்று கண்காணித்தனர். 

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் சண்முகநாதன் என்பவர் வீட்டு 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து