எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் எவ்வளவு காலம்தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேச்சால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேசியது: “துணிந்து நின்றால்தான், நாம் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட முடியும். அனைவரும் தலைவர் ராகுல் காந்தி பிரதமராகவில்லை என்ற கவலையுடன் இருக்கிறோம். காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
நம்மைப் போலவே, இந்த தேசத்தின் மக்களும் ராகுல் காந்திதான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், அவர் இன்று அரசியலைப் பார்க்கவில்லை. நான் உணர்ந்த வரை, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி விட்டுச் செல்ல வேண்டும் என்ற பார்வை ராகுல் காந்திக்கு இருந்தது. அதைத்தான் தீரப்பார்வை என்று கூறுவார்கள். ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும், தூரப்பார்வையும் இருக்கிறது. கிட்டப்பார்வையும் இருக்கிறது.
இனிவரும் காலங்களில் காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எது தேவையாக இருக்கிறது என்றால், உண்மை, ஒற்றுமை, உழைப்பு. ஒற்றுமை இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று நாம் ஆளுங்கட்சியாக கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலில் இருக்கிறோம். ஆனால், அங்கு தமிழகத்துக்கு நிகராக வெற்றி பெற முடியவில்லையே என்று பத்திரிகையாளர்கள் என்னிடத்தில் கேட்டனர். அதற்கு நான், தமிழகம் என்பது கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு என அனைத்திலும் பின்னிப் பிணைந்திருக்கிறது. எப்போதெல்லாம் இந்த தேசத்துக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகம் எழுந்து நிற்கும்.
காங்கிரஸ் பேரியக்கத்துக்கு கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் வேறு. மற்ற கட்சிகளின் கொள்கை, கோட்பாடு வேறு. அதற்காக, நம்முடைய கட்சியை வலிமைப்படுத்தக் கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று சொன்னால், அது தவறு. பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி குறித்து பேசுவது என்னுடைய தார்மிக உரிமை. நாங்கள் காமராஜர் ஆட்சியை அமைக்கமாட்டோம். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், இணக்கமாக இருக்கிறோம் என்று பேசினால், அவர்கள் நம்மை ரசிப்பார்களா என்றால், ரசிக்கமாட்டார்கள்.
தமிழகத்தில் எவ்வளவு காலம்தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? சுயமாக நாம் வளர வேண்டாமா? பிற கட்சிகளை சாராத நிலை வேண்டும் என்றால் அதற்கு தொண்டர்கள்தான் பதிலளிக்க வேண்டும். நமக்கென்று ஒரு கொள்கை, ஒரு பாதை என எல்லாமே இருக்கிறது. கூட்டணி என்பது வேறு. தேர்தல் காலங்களில் கூட்டணி வைக்கிறோம். பாசிசத்தை எதிர்க்கும்போது தைரியமாக எதிர்க்கிறோம் .தோழமைகளுடன் சேர்ந்து எதிர்க்கிறோம். நீட் தேர்வை திமுக எதிர்த்தால், காங்கிரஸ் கட்சியும் அந்த தேர்வை எதிர்க்கிறது. இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறோம். அது வேறு... இது வேறு. ஆனால், நம்முடைய கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும். அதேபோல், வாக்கு வங்கியை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஒரேமேடையில் பங்கேற்ற தே.ஜ. கூட்டணி தலைவர்கள்
23 Jan 2026செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்ரு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிகளை சேர்ந்த தலைவர்கள் ஒரேமேடையில் பங்கேற்றனர்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பில் கேட்க வேண்டிய 33 கேள்விகள் மத்திய அரசு வெளியீடு
23 Jan 2026டெல்லி, மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது குடிமக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
-
மதுராந்தகம் வந்த பிரதமர் மோடி: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு
23 Jan 2026செங்கல்பட்டு, மதுராந்தகம் வந்த பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
-
7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
23 Jan 2026சென்னை, சென்னை உட்பட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான தோ்வெண்ணுடன் கூடிய பெயா் பட்டியல் வெளியீடு
23 Jan 2026சென்னை, தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள பள்ளி மாணவா்களுக்கு தோ்வு எண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியலை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
-
நானும், டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Jan 2026சென்னை, நானும் டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
23 Jan 2026சென்னை, தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.
-
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மகாத்மா காந்தி பெயரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்
23 Jan 2026சென்னை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –25-01-2026
24 Jan 2026 -
துருக்கியில் நிலநடுக்கம்
24 Jan 2026அங்காரா, துருக்கியின் மேற்கே பலிகேசிர் மாகாணத்தில் சிந்திர்கி மாவட்டத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
ஜெர்மனியில் பனிப்பொழிவால் சாலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு
24 Jan 2026பெர்லின், ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
அமெரிக்காவில் பனிப்புயல் எச்சரிக்கை: ஜார்ஜியா, மேரிலேண்ட் உள்ளிட்ட 15 மாகாணங்களில் அவசரநிலை
24 Jan 2026ஜார்ஜியா, சுமார் 15 கோடி அமெரிக்க மக்களை பனிப்புயல் தாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்
24 Jan 2026ஜம்மு, காஷ்மீரின் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவால் பனிக்கட்டிகள் மலைபோல் குவிந்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
-
16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டம்
24 Jan 2026நியூயார்க், அமேசான் நிறுவனம் தனது நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வரும் 27ம் தேதி முதல் சுமார் 14,000 முதல் 16,000 வரையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.&
-
துபாய் - சென்னை ஏர் இந்தியா விமான சேவை திடீர் நிறுத்தம்
24 Jan 2026சென்னை, 30 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டு வந்த சென்னை- துபாய் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக ‘ஏர் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது.
-
நாளை குடியரசு தின விழா: சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை
24 Jan 2026சென்னை, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ள நிலையில் சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மாநகராட்சி ஊழியர்களால் வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் குறித்து மேயர் விளக்கம்
24 Jan 2026சென்னை, வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் மாநகராட்சி அறிவிப்பாளர் செய்யப்பட்டது இல்லை.
-
அமெரிக்காவில் உறவினர்கள் மற்றும் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
24 Jan 2026ஜார்ஜியா, அமெரிக்காவில் மனைவி மற்றும் உறவினர்களை சுட்டுக்கொன்றதாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி
24 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள். 82 பேர் மாயமாகியுள்ளனர்.
-
நேட்டோ குறித்து சர்ச்சை பேச்சு: அதிபர் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க இங்கிலான்து பிரதமர் வலியுறுத்தல்
24 Jan 2026லண்டன், நேட்டோ குறித்து சர்ச்சை பேச்சுக்கு அதிபர் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
-
வார ராசிபலன்
24 Jan 2026


