முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி : கருத்துக்கணிப்பு தகவலால் அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      உலகம்
Rishi-Sunak 2024-05-31

Source: provided

லண்டன் : பிரிட்டனில்  ஜூலை 4 -ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.  

பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தன. பிரிட்டனில் 40 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் முந்தைய பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2022-ம் ஆண்டு பதிவு  விலகிய நிலையில் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்த்த வலதுசாரியான ரிஷி சுனக் பிரதமராக நியமிக்கப்பட்டார். 

அவரின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி இந்த தேர்தலில் எதிரொலிப்பதை தேர்தல் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. கடந்த ஜூன் 12 முதல் 14 வரை சவெண்டா என்ற நிறுவனம் நடத்திய  கருத்துக்கணிப்பு சண்டே டெல்கிராப் இதழில் வெளியானது. 

அதில்  தொழிலாளர் காட்சியைச் சேர்ந்த கெயர் ஸ்டாமருக்கு 46 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 21 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

சண்டே டைம்ஸ் இதழில் வெளியான சர்வேஷன்  நிறுவனம் மே31 முதல் ஜூன் 13 வரை  நடத்திய கருத்துக்கணிப்பில், மொத்தம் 650  இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி 456 இடங்களைப் பிடிக்கும் என்றும், ரிஷி சுனக்கின் கன்செர்வேட்டிவ் கட்சி வெறும் 72 இடங்களைப் பிடிக்கும் எனவும் தெரியவந்துள்ளது. 

கடந்த காலங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 200 இடங்கள் வெற்றி பெற்றிருந்ததே குறைந்த பட்ட எண்ணிக்கை என்பது கவனிக்கத்தக்கது. சண்டே அப்சர்வர் இதழில் வெளியான  கருத்துக்கணிப்பில், தொழிலாளர் கட்சி 40 சதவீத இடங்களைப் பிடிக்கும் எனவும் கன்சர்வேட்டிவ் கட்சி 23 சதவீத இடங்களைப் பிடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து