முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழையால் போட்டி ரத்து: இந்தியா, கனடாவுக்கு தலா ஒரு புள்ளிகள்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      விளையாட்டு
16-Ram-53

Source: provided

புளோரிடா: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – கனடா அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

7 அணிகள்...

9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நாடுகள் இணைந்து நடத்தும் 9வது டி20 உலகக் கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

வெளியேறிவிட்டன...

இது தவிர கனடா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஓமன், நமீபியா, நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினி, நேபாள், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான 33வது போட்டி புளோரிடாவில் நடைபெற இருக்கிறது.

ஈரப்பசை அதிகம்...

இந்த போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடைபெற இருந்தது. மழை பெய்ததால் மைதானத்தில் ஈரப்பசை அதிகம் இருந்தது. இதனால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியா – கனடா இடையிலான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. கனடா 3 புள்ளிகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து