முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ராமநாதபுரம் வருகை

புதன்கிழமை, 19 ஜூன் 2024      தமிழகம்
Rajnath-Singh 2023-11-14

Source: provided

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி  அரிச்சல் முனையில் நாளை நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ராமநாதபுரத்திற்கு வருகை தருகிறார். 

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி பின்பற்றப்படுகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

அந்த வகையில், நாளை  ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனையில், காலை 6 மணியளவில், யோகா தின நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். 

இதற்காக இன்று மாலை ராமநாதபுரத்திற்கு தனி ஹெலிகாப்டரில் வரும் ராஜ்நாத் சிங், மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்துகிறார். 

பின்னர், உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளத்திற்கு சென்று ஆய்வு நடத்துகிறார். தனுஷ்கோடி அரிச்சல் முனையில், காலை 6 மணிக்கு நடைபெறும் கடலோர காவல் படை, விமானப்படை, கடற்படை, மெரைன் போலீசாரின் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் கலெக்டர், எஸ்.பி.,க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து