எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராமேஸ்வரம் : நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 3 படகையும் சிறை பிடித்து சென்றனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.
ராமேஸ்வரம் துறைமுக கடலோரப் பகுதியில் இருந்து சூறாவளி காற்று காரணமாக 6 நாட்களாக மீன்பிடி செல்லாமல் மீனவர்கள் இருந்து வந்தனர். இந்த நிலையில் காற்றின் தாக்கம் குறைந்ததையடுத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை காலையில் 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன் பிடிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்ததோடு ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின்,ரேமண்ட், ஹெரீன் ஆகியோரின் படகுகளை சுற்றி வளைத்தனர்.
அதற்கு பின்னர் படகை சோதனையிட்டு படகிலியிருந்த புரூக்ளின், காளீஸ்வரன், ராஜ் முருகானந்தம், முத்துக்குமார்,சீமான், சர்ப்ரதம் ,கருப்பையா, சுரேஷ்பாபு, காளிதாஸ், ரூபன், கண்ணன், நாகராஜ் ராஜேந்திரன்,ஜெகன், சகாயம், சந்தியா தீபன் ,சுகாதார்,தீபன் குமார் ஆகிய 22 மீனவர்களையும் கைது செய்தனர்.
அதற்கு பின்னர் படகை பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரணை செய்து மீனவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் மீனவர்களை விசாரணை செய்து எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து ராமேஸ்வரம் துறைமுக பகுதியில் அனைத்து மீனவ சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட மூன்று படங்களையும் உடனே விடுவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீனவர்கள் விடுவிக்கும் வரை மீன்பிடிக்க செல்ல கூடாது என முடிவு செய்து இன்று முதல் வேலைநிறுத்தத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,843 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Mar 2026சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம்,
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


