முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே பந்தில் 13 ரன்கள்: ஜெய்ஷ்வால் உலக சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      விளையாட்டு
Jaiswal 2024-02-02

Source: provided

ஹராரே : ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஒரே பந்தில் 13 ரன்கள் அடித்து இந்திய வீரர் ஜெய்ஷ்வால் உலக சாதனை படைத்துள்ளார்.

ஜிம்பாப்வே தோல்வி...

ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

புதிய உலக சாதனை...

இப்போட்டியின் முதல் ஓவரில் வீசப்பட்ட முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசி யஷஸ்வி ஜெய்ஷ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். முதல் ஓவரை சிக்கந்தர் ராசா வீசிய வீசினார். டாஸ் பாலாக வந்த முதல் பாலை ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார். அந்த பால் நோ பால் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிரீ ஹிட்டாக வந்த அடுத்த பாலையும் ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி ஒரே பந்தில் 13 ரன்கள் குவித்தது. 

முதல் அணி என்ற... 

இதன்மூலம் டி20 போட்டியில் முதல் பந்திலேயே 13 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. மேலும், டி20 போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசிய 2 ஆவது வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஷ்வால் படைத்துள்ளார். இதற்கு முன்பு தான்சானியாவை சேர்ந்த இவான் இஸ்மாயில் செலிமானி என்ற வீரர் ருவாண்டா அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து