முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வித்துறைக்கு காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது : பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

டெல்லி : கல்வித்துறைக்கு காமராஜர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர், பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெருந்தலைவர் காமராஜருக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்வித்துறைக்கு காமராஜர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், காமராஜரின் பிறந்தநாளில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறேன். அவரது தொலைநோக்கு தலைமை பண்பு மற்றும் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக அவர் மிகவும் மதிக்கப்படுகிறார்.

கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு காமராஜர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது. நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கான காமராஜரின் லட்சியங்களை நிறைவேற்றும் என்ற எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து