முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: ஆா்ஜென்டீனா சாம்பியன்

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024      விளையாட்டு
Argentina 2024-07-15

Source: provided

மியாமி : கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் கொலம்பியாவை வீழ்த்தி ஆா்ஜென்டீனா 16-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பலப்பரீட்சை... 

அமெரிக்காவின் புளோரிடாவின் மியாமி நகரில் திங்கட்கிழமை அதிகாலை நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆா்ஜென்டீனா-கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்க வில்லை.

கூடுதல் நேரம்...

இதனால் இரு அணிகளுக்கும் கூடுதல் அரை மணி நேரம் வழங்கப்பட்டது. அதில் இரு அணிகளும் கோல் அடிக்க முழு முயற்சியுடன் போராடின. இருந்தாலும் அந்த கூடுதல் நேரத்தின் முதல் 15 நிமிடத்திலும் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இரண்டாவது 15 நிமிடத்தில் ஆா்ஜென்டீனா வீரர் லாடாரோ மார்டினஸ் கோல் ஒன்றை அடிக்க அந்த அணி முன்னிலைப் பெற்றது.

சாம்பியன் பட்டம்... 

இதைத்தொடர்ந்து கொலம்பிய வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சி அனைத்தையும் ஆா்ஜென்டீனா வீரர்கள் சிறப்பாக விளையாடி தடுத்தனர். இறுதியில் ஆா்ஜென்டீனா அணி 1-0 என்கிற கோல் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது. தொடரில் 5 கோல் அடித்த லாடாரோ மார்டினஸுக்கு தங்கக் காலணி விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 16-வது முறையாக கோபா அமெரிக்கா தொடரை ஆா்ஜென்டீனா கைப்பற்றியது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா தொடரையும் ஆா்ஜென்டீனா அணி சாம்பியன் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து