முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோபைடனுக்கு கொரோனா: வெள்ளை மாளிகை அறிவிப்பு

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      உலகம்
Joe-Biden 2023 04 11

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவத்துள்ளது.

இதுதொடர்பான வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 

அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்  டெலாவேருக்கு திரும்புவார்.  அங்கு அவர் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார்.  அந்த நேரத்தில் தனது அனைத்து கடமைகளையும் முழுமையாகச் செய்வார்  என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிபர் ஜோபைடன் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது, நான் தற்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன். அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. 

நான் குணமடைவதற்காக தனிமைப்படுத்தி கொள்ள உள்ளேன். அந்த நேரத்தில் அமெரிக்க மக்களுக்கான பணியை தொடர்ந்து செய்வேன் என்று பதிவிட்டுள்ளார்.

81 வயதான ஜோபைடன், லாஸ் வேகாசில் நடந்த என்.ஏ.ஏ.சி.பி. தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து