முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 சட்டத்திருத்த மசோதாக்கள்: தமிழக கவர்னர் ரவி ஒப்புதல்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      தமிழகம்
RN Ravi 2023-04-06

சென்னை, வருவாய், மக்கள் தொகை வரம்புகள் குறைத்தல் மசோதா உள்ளிட்ட சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். 

இதன்படி சென்னை காவல் சட்டங்களை மற்ற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா, சென்னையில் கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்க வகை செய்யும் மசோதா, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வருவாய், மக்கள் தொகை வரம்புகள் குறைத்தல் மசோதா மற்றும் ஊரக உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும்போது அப்பகுதியில் வரும் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கான மசோதா ஆகிய மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.ரன்.ரவி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். கவர்னரின் ஒப்புதலை தொடர்ந்து சட்டத்திருத்தங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து