முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 27-ம் தேதி நிதி ஆயோக் கூட்டம்: மம்தா பானர்ஜி பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2024      இந்தியா
Mamata-1

Source: provided

கொல்கத்தா : நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமராக மோடி 3-வது முறை ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும்.

இந்நிலையில், இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக வரும் 25-ம் தேதி அவர் டெல்லிக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

நிதி ஆயோக்கின் ஒன்பதாவது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் மம்தா கலந்து கொண்டு மாநிலத்திற்கான மத்திய நிலுவைத் தொகை மற்றும் கிராமப்புற வீட்டுவசதி மற்றும் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ. நிதிகள் குறித்த பிரச்சினையை எழுப்ப உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார். 

டெல்லி செல்லும் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மற்றும் இண்டியா கூட்டணியின் மூத்த தலைவர்களையும் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான கவுன்சிலில் அனைத்து மாநில முதல்வர்களும், யூனியன் பிரதேசங்களின் துணை கவர்னர்களும் மற்றும் பல மத்திய அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து