எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தருமபுரி : கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 2 அணைகளில் இருந்து நேற்று முன்தினம் மொத்தம் 75 ஆயிரம் கனஅடி அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று முன்தினம் கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளில் இருந்து கடந்த 17-ம் தேதி வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடிக்கு மேல் ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் காலை நிலவரப்படி நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடிக்கும் மேல் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று முன்தினம் மாலை 75 ஆயிரம் கனஅடி அளவுக்கு மேல் நீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் நேற்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகள் மூழ்கும் நிலையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும், காவிரி ஆற்றங்கரையின் இருபுறமும் தொட்டப்படி தண்ணீர் சீறிபாய்ந்து சென்றது.
மேலும், மெயின் அருவிக்கு செல்லும் வழியாக நடைபாதைக்கு மேலும் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த 15-ம் தேதி மாலை முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கும், அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்கவும், மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகள் யாரும் உள்ளே செல்லாமல் நடைபாதைக்கு செல்லும் வழியில், பூட்டி சீல் வைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல முடியாமல், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கர்நாடகா அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடி அளவு வரை வரக்கூடும் என்பதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.