முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமலா ஹாரிஸ் தென்னை மரக் காமெடி : இணையத்தைக் கலக்கும் பிரபல மீம்

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2024      உலகம்
Kamala-Harris 2024 07 23

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்கர்களின் முன்னேற்றம் குறித்து நடந்த நிகழ்ச்சியின் போது கமலா ஹாரிஸ் பேசிய தென்னை  மர காமெடி தற்போது மீம்களாக அவரது ஆதரவாளர்களால் இணையத்தை கலக்கி டிரண்டாகி வருகிறது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகியுள்ள நிலையில், இந்திய - ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பளராகி உள்ளார். 

இந்நிலையில் கமலா ஹாரிஸ் குறித்த பிரபலமான ஒன்று தற்போது மீண்டும் டிரண்டாகத் தொடங்கியுள்ளது.  கடந்த 2023-ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் வைத்து நடந்த ஹிஸ்பானிக் அமரிக்கர்களின் முன்னேற்றம் குறித்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை அதிபர் கமலா ஹாரிஸ், 

எனது தாய் சில நேரங்களில் சொல்வதுண்டு, இந்த இளைய தலைமுறை பிள்ளைகளிடம் என்ன தவறு என்று எனக்குத் தெரியவில்லை, நீங்கள் எல்லோரும் எதோ தென்னை மரத்தில் இருந்து நேராக பூமியில் விழுந்தவர்கள் என்று நினைக்கிறீர்களா? என்று அவர் கேட்பதுண்டு என்று சொல்லி விட்டு சிரித்தார். 

அவர் பேசியது அப்போது டிரண்ட் ஆன நிலையில் கமலா ஹாரிஸ் தென்னை மர மீம்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின. தற்போது கமலா அதிபர்  வேட்பாளராகியுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் இந்த மீம்களை பிரச்சார ஆயுதமாகியுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து