முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேக வெடிப்பால் நிலச்சரிவு: கேதார்நாத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2024      இந்தியா
Kedarnath-2024-08-01

டேராடூன்,  உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மந்தாகினி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கி தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்- கௌரி குண்ட் வழித்தடத்தில் ஆற்றை தாண்டி சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் உள்ள சந்தைகள் மற்றும் ஓட்டல்களில் உள்ள மக்களை அதிகாரிகள் வெளியேற்றினர்.  

பல இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், 150 முதல் 200 யாத்ரீகர்கள் கேதார்நாத்தில் சிக்கித் தவிக்கக் கூடும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் கோவிலுக்குச் செல்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேக வெடிப்பு கேதார்நாத் நடைபாதையில் பீம் பாலி ஓடையில் நிலச்சரிவுக்கு வழிவகுத்தது, பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட பாதை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, மேக வெடிப்பு சம்பவத்தில் அங்கு இதுவரை எந்த உயிரிழப்பும், காயமும் பதிவு செய்யப்படவில்லை. 

உத்தரகாண்டின் தெஹ்ரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, பல வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டது. இடிபாடுகளுக்கு அடியில் 42 வயது பெண்ணும், அவரது  மகளும் புதையுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

டோலி கிராமத்தில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்த சரிதா தேவி மற்றும் 15 வயது அங்கிதாவின் உடல்களை மீட்புப் படையினர் வெளியே எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து