முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      இந்தியா
Rangasamy 2023 07-16

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.  

புதுவை முதல்வர் ரங்கசாமி நேற்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடினார்.   அவரது பிறந்தநாளை என்.ஆர்.காங்கிரசார் தொகுதி தோறும் உற்சாகமாக கொண்டாடினர். பிறந்தநாளையொட்டி முதல் அமைச்சர் ரங்கசாமி தனது பெற்றோர் படத்தை வணங்கினார். தொடர்ந்து கோரிமேட்டில் உள்ள சத்குரு ஸ்ரீஅப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலுக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி  தீபாராதனை காண்பித்து, பூஜை செய்தார்.

கோரிமேட்டில் உள்ள அவரின் இல்லத்தில் என்ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், அதிகாரிகள், தொண்டர்கள் வாழ்த்துக்களை பெற்றார். தொண்டர்கள் கொண்டு வந்த 75 கிலோ கேக் வெட்டினார். 

இதன்பின் முதல்வர் ரங்கசாமி காலை 10.30 மணியளவில் கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோயிலுக்குச் சென்றார். அங்கு அவரது பிறந்த நாளையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

 பிறந்தநாளையொட்டி புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.  பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். புதுச்சேரியின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வரும் அனுபவமிக்க நிர்வாகி அவர். நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் டுவிட்டரில் மாநிலங்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, மன்சுக் மாண்டவியா, மனோகர்லால், முன்னாள் கவர்னர் தமிழிசை உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

 முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்   வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் திகழ விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் போன் மூலம் தொடர்பு கொண்டு ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

பேரவைத்தலைவர் செல்வம், புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணன் குமார், பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து