முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா, தெலுங்கானாவுக்கு தலா ரூ. 50 லட்சம் நிவாரண நிதி : நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2024      சினிமா
Jr -N T R  2024-09-03

Source: provided

அமராவதி : கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளின் முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். அறிவித்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆந்திராவில் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. 

இந்நிலையில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதல்வர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஆந்திரா, தெலுங்கானா இரண்டு மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரத்திலிருந்து மக்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன். 

வெள்ள மீட்பு பணிகளுக்காக இரண்டு மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைக்கு உதவும் வகையில், எனது பங்களிப்பாக 2 மாநிலங்களுக்கும் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி அளிக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

முன்னதாக, தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் ரூ. 25 லட்சத்தை ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து