முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை முதல் ரஷ்யாவில் சுற்றுப்பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      இந்தியா
Ajith-Doval 2024-09-08

Source: provided

புதுடெல்லி : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை முதல் 2 நாட்கள் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடாக உள்ள இந்தியா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யலாம் என்று  புடின் தெரிவித்துள்ளார். இதேபோல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார். இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.

இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,  நாளை 10 மற்றும் 11-ம் தேதிகளில் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். பிரிக்ஸ் மாநாட்டுக்காக செல்லும் அவர், ரஷ்யா மற்றும் சீனா நாடுகளின் உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

அஜித் தோவலின்  இந்த பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புடினை அஜித் தோவல் சந்தித்து பேசுகிறார். அப்போது ரஷ்யா - உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும், அமைதிக்கான முயற்சிகள் தொடர்பாகவும் அஜித் தோவல் விவாதிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து