முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா பல்கலை.க்கு 14-வது முறையாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      தமிழகம்
Anna-University 1

சென்னை,  சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்துக்கு 14-வது முறையாக மர்ம நபர்கள் நேற்று (அக்.1) வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.  

சமீப காலமாக கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்துள்ளதாக தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். மின்னஞ்சல் மூலம் இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. 

மிரட்டல் விடுக்கப்படும் போதெல்லாம் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சோதனை நடத்துவதும் தொடர் கதையாகிறது.

மிரட்டல் விடுப்பது ஒரே கும்பல்தான் என்றும், அதுவும் வெளிநாட்டில் இருந்துதான் இதுபோன்ற மிரட்டல்கள் வருகிறது. அக்கும்பலை கைது செய்ய மத்திய போலீஸாரின் உதவியும் கோரப்பட்டுள்ளது எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்துக்கு அடுத்தடுத்து நேற்று இரண்டு 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் சேர்த்து இதுவரை சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு 14 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  அண்ணா நகர் மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த மேலும் 2 பள்ளிகளுக்கும் நேற்று மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து