எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஐதராபாத் : வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதமடித்து அசத்திய நிலையில், இந்திய அணி 297 ரன்களை பதிவுசெய்து டி-20 போட்டிகளில் 2-வது அதிகபட்ச ரன்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளது.
தொடரை வென்றது...
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனைத்தொடர்ந்து டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-0 என இந்திய முன்னிலை பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங்...
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையெயான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நேற்று ஐத்ராபாத்தில் நடக்கிறது. 3வது போட்டிக்கான இந்திய அணி: சஞ்சு சாம்சன்(w), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ்(c), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ் இடம் பிடித்துள்ளனர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 4 ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினார். ஆனால் அதற்குபிறகு இரண்டாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
40 பந்துகளில் சதம்...
தொடக்கத்தில் அதிரடிக்கு பிள்ளையார் சுழி போட்ட சஞ்சு சாம்சன், ரிஷாத் ஹொசைன் வீசிய 10வது ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். 9 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன் வெறும் 40 பந்துகளில் தன்னுடைய முதல் டி20 சதமடித்து அசத்தினார். மறுமுனையில் சஞ்சு சாம்சனுக்கும் எனக்கும்தான் போட்டியே என்பதுபோல் வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ், 6 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்தார். சஞ்சு சாம்சன் 111 ரன்கள் அடித்து வெளியேற, தொடர்ந்து களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியைத்தொடர்ந்தார்.
வரலாறு படைத்தது...
14 ஓவர் முடிவில் இந்திய அணி 200 ரன்களை எட்டிய நிலையில், 300 ரன்கள் என்ற இமாலய ரன்னை இந்தியா எட்டுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் 8 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 75 ரன்கள் அடித்து சூர்யகுமார் யாதவ் வெளியேறினார். பின் களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் இருவரும் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தனர். பராக் 34 ரன்கள், ஹர்திக் பாண்டியா 47 ரன்கள் என அடித்து அசத்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 297 ரன்களை எட்டி வரலாறு படைத்தது. 297 ரன்கள் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை எட்டியது இந்திய அணி. முதல் இடத்தில் 314 ரன்களுடன் நேபாள் நீடிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
மரணமடைந்தவர்களின் 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம்
17 Jul 2025டெல்லி: 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
17 Jul 2025டமாஸ்கஸ்: சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
ஐ.பி.எல். காரணமாக மே.இ.தீவுகள் அணி தரம் குறைந்து வருகிறது: லாரா
17 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின்: ஐ.பி.எல். மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது என லாரா தெரிவித்துள்ளார்.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
திருப்புவனம் காவலாளி மரண வழக்கு: 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன்
17 Jul 2025சிவகங்கை: மடப்புரம் காவலாளி மரண வழக்கில் 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
-
ஒரே நாளில் 30 பேர் பலி: பாக்.கில் மழைக்கால அவசரநிலை அறிவிப்பு
17 Jul 2025லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலைய
-
ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்
17 Jul 2025டெல்லி: ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரத்து: அமெரிக்க தூதரம் கடும் எச்சரிக்கை
17 Jul 2025அமெரிக்கா: குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரதது செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.