எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நெல்லை : நெல்லை நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நாயன்மாா்களால் பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் சுவாமிக்கு ஆனித் தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18-ம் தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 10 நாட்களாக தினமும் காலை, மாலை நேரங்களில் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா புறப்பாடும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் பிற்பகல் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை பிரம்ம முகூா்த்தத்தில் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லையப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். முதலில் மூலவா் காந்திமதிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாதபூஜை நடைபெற்றுது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து சுவாமி - அம்பாளுக்கு புது வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, காப்பு கட்டி திருஷ்டி கழித்தனா். அதன்பின் மாலை மாற்றும் வைபவம் என திருமண சடங்குகள் நடைபெற்றன. சுவாமி நெல்லைப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்து கொடுத்ததும் பக்தா்களின் ஹரஹர சிவசிவ கோஷங்கள் முழங்க மங்கல இசை இசைக்க திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு நலுங்கு இட்டு பாலும், பழமும் கொடுத்து சப்தபதி பொரியிடுதல் போன்றவை நடைபெற்றன. வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவா மூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது. அதனை தொடா்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், அறங்காவல் குழுவினா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜன. 9-ல் அமித்ஷா தமிழகம் வருகிறார்
25 Dec 2025சென்னை, பா.ஜ.க.
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
பி.வி.சிந்துவுக்கு பொறுப்பு
25 Dec 2025உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
த.வெ.க. தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
கேல் ரத்னா- அர்ஜுனா விருது: 24 வீரர்கள் பெயர் பரிந்துரை
25 Dec 2025புதுடெல்லி, கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 24 வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
விருதுகள் வழங்கி...
-
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரை
25 Dec 2025லண்டன், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியம
-
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025புதுடெல்லி, ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி
25 Dec 2025மும்பை, மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே புதிய அறிவிப்பை அறிவித்துள்ளனர்.


