முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகழ்பெற்றவர்கள் கட்சி தொடங்கினாலும் வி.சி.க.வுக்கு போட்டியாளராக முடியாது: திண்டிவனத்தில் திருமாவளவன் பேச்சு

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      தமிழகம்      அரசியல்
Thirumavalavan 2023 07 30

விழுப்புரம், எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி தொடங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளராக ஆக முடியாது என திண்டிவனத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் திலிபன் தாய் ரானியம்மாள் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தமிழகத்தில் எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி துவங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளாராக ஆக முடியாது. ஏனென்றால் நம்முடைய களம் முற்றிலும் மேலானது. இந்த களத்தில் யாரும் நம்மோடு போட்டிக்கு வரமுடியாது. இதை நம்மால் மட்டும்தான் செய்ய முடியும். நம்மால் மட்டும்தான் இப்படியொரு இயக்கத்தை நடத்த முடியும்.

மேலும் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து யாரோ ஒருவர் கட்சி தொடங்கினாலும் அவர்கள் பெயரை பதிவிட்ட பின்பு தான் விடுதலைச் சிறுத்தைகள் பெயரை பதிவிடுகிரார்கள். எனவே நாம் இன்னும் விழுப்பாக இருப்போம். சமுக ஊடங்களில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில் நாம் அவரசப்பட்டு எதையும் பதிவிட்டுவிடக் கூடாது என கட்சியினருக்கு அறிவுரை வழங்கியவர், திருமாவளவன் சாரசரி அரசியல்வாதி அல்ல என்பதை காலம் சொல்லும். அதை புரிந்துகொள்வதற்கே இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும் என்றார். இந்த நிகழ்வில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து