முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: முதல்கட்ட பிரசாரம் இன்றோடு நிறைவு : இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      இந்தியா
Modi-Rahul 2024-04-10

Source: provided

ராஞ்சி : ஜார்கண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல்கட்ட பிரசாரம் இன்று மாலையோடு நிறைவடைகிறது. முதல் கட்ட தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர், ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் தற்போதைய பதவிக்காலம் ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், அம்மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட இம்மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

இந்த தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளது. அதே போல், பா.ஜ.க, ஏ.ஜே.எஸ்.யூ, ஐக்கிய ஜனதா தளம், எல்.ஜே.பி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் களமிறங்குகிறது. இதில், பா.ஜ.க 68 தொகுதிகளிலும், ஏ.ஜெ.எஸ்.யூ 10 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி கட்சிகளும், புதியதாக ஆட்சி அமைக்க பா.ஜ.க கூட்டணி கட்சிகளும் தீவிர முனைப்பில் தேர்தலைச் சந்தித்து வருகிறது. இதனால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களில் அனல் பறந்து வருகிறது. 

இத்தகைய சூழலில் தான் ஜார்க்கண்டில் முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் (11.11.2024) முடிவடைகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் தலைநகர் பிரதமர் மோடி, நேற்று (10.11.2024) ராஞ்சியில் உள்ள முக்கிய சாலை வழியாக சுமார் 5 கி.மீ. தூரம் ரோடு ஷோ சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக இரண்டு இடங்களில் தேர்தல் பரப்புரைக்கான பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியிருந்தார். தேர்தலை முன்னிட்டு மூன்றாவது முறையாகப் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்திற்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நேற்று முன்தினம் ராகுல் உள்ளிட்டோர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து