முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனவரியில் வெளியாகும் சங்கரின் கேம் சேஞ்சர்

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2024      சினிமா
Game-changer 2024-11-11

Source: provided

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர். இப்படத்தின் நாயகனாக ராம் சரண் நடிக்க அவருக்கு ஜோடியாக  கியாரா அத்வானி நடிக்கிறார்.

இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தை தில் ராஜூவின் ஸ்ரீவெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் ஆதித்யாராம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.  படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ, தனது "21 ஆண்டுகால பயணத்தில் தனக்கு இது 50வது படம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் சங்கர் என்னிடம் கூறிய கதைக்களம் எனக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இது பற்றி என் நண்பர் ஆதித்யாராமிடம்  பேசியதையடுத்து, இருவரும் இணைவது என முடிவெடுத்துள்ளோம். 'கேம் சேஞ்சர்' மட்டுமில்லை, நாங்கள் தமிழ் மற்றும் பான் இந்தியன் திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். என்றார்..

மேலும், முதற்கட்டமாக லக்னோவில் நவம்பர் 9 ஆம் தேதி திரைப்படத்தின் டீசரை வெளியிட்டோம்.  அதன்பிறகு அமெரிக்கா மற்றும் சென்னையிலும்  நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஜனவரி மாத முதல் வாரத்தில் தெலுங்கானாவில் ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்தப் படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து