முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 10 வரை அவகாசம்

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      தமிழகம்
EP 2023-09-25

Source: provided

சென்னை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிசம்பர்.10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பென்ஜால் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல் காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30-11-2024 முதல் 09-12-2024 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் 10-12-2024 வரை செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து