எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மாநிலங்களுக்கு 50 சதவீத வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வளர்ச்சிக்கு தமிழகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நிதிக்குழுவுக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
16-வது நிதிக்குழு எடுக்க உள்ள முடிவுகள், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நிதிச் செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது., அண்மையில், பொருளாதார வல்லுநர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்குழுவின் கூட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. பல்வேறு துறைசார் நிபுணர்களைக் கொண்ட இந்த குழு இந்தியா எதிர்கொண்டு வரும் பொருளாதாரச் சிக்கல்கள், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளில் உள்ள சமச்சீரற்ற தன்மை ஆகியவற்றை சரிசெய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிதிக்குழு எடுக்க உள்ள முடிவுகள், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நிதிச் செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுப்பது மட்டுமின்றி, எதிர்வரும் காலங்களில் இந்தியா தேர்வு செய்யப்போகும் பொருளாதாரப் பாதையின் மீதும் தாக்கம் செலுத்தக் கூடியவையாகும். உலக அளவில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வரும் இவ்வேளையில், 16-வது நிதிக்குழு தனது பணியை மேற்கொண்டுள்ளது.
15-வது நிதிக்குழு மாநிலங்களுக்கு 41% வரிப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த நிலையிலும், முதல் நான்காண்டுகளுக்கு மத்திய அரசின் வரிவருவாயில் இருந்து 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டது. எதிர்பாராத விதமாக வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியதே பகிர்வில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகும்.
மாநிலங்கள் மக்களுக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும் அதேவேளையில், அவற்றிற்கான மத்திய நிதியும் அதற்கேற்றவாறு உயர்த்தப்பட வேண்டும். மத்திய திட்டங்களுக்குச் செலவாகும் கூடுதல் நிதி மற்றும் மத்திய அரசின் குறைந்த நிதிப்பகிர்வு ஆகிய இரண்டு காரணங்களும் மாநிலங்கள் மீதான நிதிச்சுமைக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. எனவேதான், மத்திய வரிவருவாயில் இருந்து மாநிலங்களுக்கு 50 சதவீத வரிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். இது மாநிலங்கள் நிதி சுயாட்சியுடன் செயல்படவும், மாநில மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிமுகப்படுத்தவும் உதவும்.
சமச்சீரான அணுகுமுறையே பெரிய அளவிலான தேசிய பொருளாதார வளங்களுடன், வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களுக்குத் தேவையான பகிர்வை அளிக்கவும், முன்னேற்றப் பாதையில் இருக்கும் மாநிலங்களின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கத் தேவையான வளங்களைப் பகிர்ந்தளிக்கவும் உதவும். தங்களது முழுத்திறனையும் பயன்படுத்தி, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் உந்துசக்தியாக இருக்க, வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு இதுபோன்ற வரிப்பகிர்வு முறையே அவசியம்.
இதற்கிடையில், தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்கள் மக்கள்தொகை மற்றும் நகரமயமாதல் போன்ற தனித்துவமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. தேசிய சராசரியை விட வயதானோர் எண்ணிக்கை அதிகரிப்பு, வயதான மக்களுக்கான ஆதரவு திட்டங்களுக்கு ஆகும் செலவினங்கள் அதிகரிக்கும் நிலையில், நுகர்வு அடிப்படையிலான வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதுபோன்ற மாநிலங்கள் வளர்ச்சியில் தேக்கமடையும், 'நடுத்தர வருமான மாநிலம்' எனும் பொறிக்குள் சிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
அதேபோல், வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் நகரமயமாதல் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய சவால்களில் ஒன்றாகும். தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நாட்டிலேயே வேகமாக நகரமயமாதல் அதிகரிக்கும் சவாலை எதிர்கொண்டுள்ளன. இதன் காரணமாக 2031-ம் ஆண்டு அதன் நகர்ப்புற மக்கள்தொகை 57.30 சதவீதம் என்ற நிலையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது அப்போதைய தேசிய சராசரியான 37.90 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும். எனவே, நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் எதிர்கால நகரமயமாதலுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவைப்படும் வளங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அதேசமயம் நிதிக்குழுவின் பரிந்துரைகள் பொருளாதார கணக்குகளுக்கு அப்பாற்பட்டது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அனைத்து மாநிலங்களும் சமமாகப் பங்களித்து, அதிலிருந்து பலனடைவதற்கும் உகந்த எதிர்காலத்தைத் தீர்மானிப்பதும் கூட. அது உற்பத்தியை ஊக்குவிப்பது, நகரமயமாதல் சவால்களை எதிர்கொள்வது அல்லது காலநிலை மாற்றத்தை கையாள்வது என எதுவாக இருப்பினும், நிதிக்குழுவின் பரிந்துரை கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியாவை நிலைநிறுத்தத் தேவையான பாதையையும் தீர்மானிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது." இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
குற்ற வழக்கு தொடர்வு துறை தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
12 Mar 2026சென்னை, குற்ற வழக்கு தொடர்வு துறை தேர்வான 45 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
சென்னையில் வருகிற 15-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் இப்தார் விருந்து வழங்குகிறார் எடப்பாடி பழனிசாமி
12 Mar 2026சென்னை, சென்னையில் வருகிற 15-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி இப்தார் விருந்து வழங்குகிறார்.
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: 2 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
12 Mar 2026ராமேஸ்வரம், ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வடக்கு மன்னார் கடற்பரப்பில் வைத்து ஒரு படகுடன் இலங்கை கடற்படை கை
-
பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற புதிய திட்டப்பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Mar 2026சென்னை, பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 44.67 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 315 புதிய திட்டப் பணிகளுக்
-
யு.ஏ.இ.-லிருந்து குஜராத் நோக்கி வந்த வர்த்தக கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
12 Mar 2026புதுடெல்லி, யு.ஏ.இ.-லிருந்து குஜராத் நோக்கி வந்த வர்த்தக கப்பல் மீதான ஈரான் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
ஜனநாயகன் பட ஓ.டி.டி. உரிமம் ஒப்பந்தம் ரத்தால் மேலும் சிச்கல்
12 Mar 2026சென்னை, ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமம் ஒப்பந்தத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ம
-
ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை: பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வர் கண்டனம்
12 Mar 2026சென்னை, பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஈரான் போர் தொடங்கிய பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து முதல்முறையாக இந்தியா வந்த எண்ணெய்க் கப்பல்
12 Mar 2026மும்பை, ஈரான் போர் தொடங்கிய பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து முதல்முறையாக சவுதி அரேபியாவில் இருந்து மும்பை துறைமுகத்துக்கு எண்ணெய்க் கப்பல் வந்தடைந்துள்ளது.
-
குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெறும் ஓ.பி.சி. தேர்வாளர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்குங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
12 Mar 2026சென்னை, அரசியலமைப்பின் சமத்துவநெறியோடு செயல்பட்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
-
தமிழ்நாட்டில் பாதுகாப்பு என்பதே எங்கும் இல்லை: த.வெ.க. தலைவர் விஜய் காட்டம்
12 Mar 2026சென்னை, தமிழகத்தில் பாதுகாப்பு என்பதே எங்கும் இல்லை என்ற நிலை உள்ளதாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வளர்ச்சியைப் பரவலாக்கி அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்: முதல்வர்
12 Mar 2026சென்னை, தமிழகத்தில் வளர்ச்சியைப் பரவலாக்கி அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம் என்றும், மாபெரும் தமிழ்க்கனவை சாத்தியப்படுத்துவோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
மீண்டும் சரிந்த தங்கம் விலை
12 Mar 2026சென்னை, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760-க்கு விற்பனையானது.
-
பெட்ரோல் -டீசல் தட்டுப்பாடு என வதந்தி: எரிபொருள் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகளாள் பரபரப்பு..!
12 Mar 2026சென்னை, 3 நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியதால், அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோ
-
சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் 3 நிபந்தனைகள்
12 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் 3 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
-
சமையல் கியாஸ் சிலிண்டருக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய அரசு விளக்கம்
12 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
மிரட்டி, பணம் கொடுத்து வாங்க முடியாத ஒரே தலைவர் விஜய்தான்: ஆதவ் அர்ஜூனா பேச்சால் பரபரப்பு
12 Mar 2026சென்னை, எல்லாரையும் விலை கொடுத்து வாங்கலாம். எல்லாரையும் மிரட்டலாம். மிரட்டமுடியாத, பணம் கொடுத்து வாங்க முடியாது ஒரே தலைவர் என்றால் அது த.வெ.க.
-
வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்கு - கப்பல்கள் மீது ஈரான் தொடர் தாக்குதலால் பதற்றம்
12 Mar 2026தெஹ்ரான், குவைத், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஈரானின் தொடர் தாக்குதல்களால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
-
த.வெ.க. உடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கற்பனையே: எடப்பாடி பழனிசாமி மீண்டும் விளக்கம்
12 Mar 2026திருச்சி, த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது கற்பனையான ஒன்று.
-
விவசாயிகளின் வருமானம் தொடர்பான பிரதமர் நரேந்திரமோடியின் வாக்குறுதி என்னவானது...? அமைச்சர் ரகுபதி கேள்வி
12 Mar 2026சென்னை, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது? என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: சென்னையில் டீ, காபி விலை உயர்வு: மக்கள் கடும் அதிர்ச்சி
12 Mar 2026சென்னை, வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் டீ, காபி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
-
பிரதமரையும் காணவில்லை, சிலிண்டரையும் காணவில்லை; பாராளுமன்ற வளாகத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம்
12 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற வளாகத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்த்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை; குற்றவாளிகளை பிடிப்பதற்கு ஆறு தனிப்படைகள் அமைப்பு: நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் தகவல்
12 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் த
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 Mar 2026- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கண்ட பேரண்ட பட்சிராஜ அலங்காரம்.
-
இன்றைய நாள் எப்படி?
12 Mar 2026


